ஸ்ரீநகர்: அரசு வசம் இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்கு ஜம்மு அரசு நிர்வாகம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை இரு யூனியன் பகுதிகளிலும் முடுக்கி விட்டது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியர் அனைவரும் மேற்கண்ட யூனியன் பிரதேசங்களில் நிலம் வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனிடையே ஜம்மு அரசு நிர்வாகம் தன் வசம் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பல்வேறு பயன்பாட்டிற்காக தொழிற்துறை மற்றும் வர்த்தகத்துறைக்கு மாற்றம் செய்துள்ளது. எஞ்சியுள்ள நிலமும் விரைவில் தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தொழில் மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் மனோஜ்குமார் திவேதி அரசு 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாற்றி உள்ளதை உறுதிபடுத்தினார். மேலும் அவர் கூறுகையில் ஜம்மு, கத்துவா, உத்தம்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இடம் அமைந்துள்ளது.
இதன் மூலம் உணவு பூங்கா, மருத்துவளாகம் , தகவல்தொழில் நுட்பபூங்கா, திரைப்பட தயாரிப்பு மையங்கள், பள்ளிகள் துவக்குவது போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE