பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்| Dinamalar

பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020
Share
சார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற 20 ஓவரில் 120 ரன்கள் மட்டும் எடுத்தது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு விரிதிமன் சகா தேர்வானார். பெங்களூரு அணியில் ஸ்டைன், ஷிவம்

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற 20 ஓவரில் 120 ரன்கள் மட்டும் எடுத்தது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு விரிதிமன் சகா தேர்வானார். பெங்களூரு அணியில் ஸ்டைன், ஷிவம் துபேவுக்கு பதிலாக இசுரு உதானா, நவ்தீப் சைனி இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news




பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (5), கேப்டன் விராத் கோஹ்லி (7) ஏமாற்றினர். ஜோஷ் பிலிப் (32), டிவிலியர்ஸ் (24), வாஷிங்டன் சுந்தர் (21) ஆறுதல் தர, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X