கொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் விஞ்ஞானிகள்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு கடந்த திங்களன்று அவசர ஊடக கலந்துரையாடல் நடத்தினார்.பிரிட்டனில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்க அவர் பத்திரிகையாளார்களை சந்தித்தார்.பிரிட்டனில் அத்தியாவசிய கடைகள், பள்ளிகள்,

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு கடந்த திங்களன்று அவசர ஊடக கலந்துரையாடல் நடத்தினார்.



latest tamil news



பிரிட்டனில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்க அவர் பத்திரிகையாளார்களை சந்தித்தார்.
பிரிட்டனில் அத்தியாவசிய கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தாக்கம் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவி வருவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் மூன்று கட்ட தடுப்பு நடவடிக்கைகள் இடப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் தன்னிச்சையான சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. பிரிட்டனை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் அதிவேகமாக பரவி வருவதாக சயின்டிஃபிக் அட்வைசரி குரூப் எமர்ஜென்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைக் காட்டிலும் மிகவும் கொடூரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுப்பவர்களே அதிகம். பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி ஸ்நாக் கூறுகையில் உலகிலேயே ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் பிரிட்டனின் பொருளாதாரம் ஆகும். ஆனால் தற்போது அதில் 20 சதவீதம் முடங்கியுள்ளது. இரண்டாவது அலை ஏற்பட்டால் பிரிட்டனின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது மிகக் கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ramanathan - Chennai,இந்தியா
01-நவ-202011:31:41 IST Report Abuse
P Ramanathan அருமை srini
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-நவ-202009:34:09 IST Report Abuse
vbs manian பல மேலை நாடுகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. இங்கோ மேலும் மேலும் தளர்த்தப்படுகிறது.
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
01-நவ-202007:05:46 IST Report Abuse
Srinivasan Rangarajan வாழ்வா(உயிரா), வாழ்வாதாரமா ...... மனித சமூகத்தை எதிர் நோக்கியுள்ள மிக பெரிய சவால். ..இயற்கையை பொறுத்தவரை மனிதனும் ஒன்றுதான் மண்புழுவும் ஒன்றுதான்...இயற்கையுடன் நடக்கும் இந்த போரில் மனிதன் தான் வாழும் முறையை அடியோடு மாற்றிக்கொண்டால் மட்டுமே ஓரளவு வெற்றி பெறமுடியும் என தோன்றுகிறது. அது சாத்தியப்படுமா ...... மில்லியன் டாலர் கேள்வி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X