பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நவ., 1, 1959மயிலாடுதுறையில், 1910 மார்ச், 1ம் தேதி பிறந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். இவரது சிறு வயதிலேயே, குடும்பம், திருச்சியில் குடியேறியது. 10வது வயதில், திருச்சி ரசிக ரஞ்சன சபாவில், அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். மதுரை பொன்னு ஐயங்காரிடம், கர்நாடக இசையையும், நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சியையும் பெற்றார்.பவளக்கொடி நாடகத்தில், அர்ஜுனனாக நடித்தார். இந்த
 இதே நாளில் அன்று


நவ., 1, 1959



மயிலாடுதுறையில், 1910 மார்ச், 1ம் தேதி பிறந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். இவரது சிறு வயதிலேயே, குடும்பம், திருச்சியில் குடியேறியது. 10வது வயதில், திருச்சி ரசிக ரஞ்சன சபாவில், அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார்.

மதுரை பொன்னு ஐயங்காரிடம், கர்நாடக இசையையும், நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சியையும் பெற்றார்.பவளக்கொடி நாடகத்தில், அர்ஜுனனாக நடித்தார். இந்த நாடகம், அதே பெயரில், 1934-ல், திரைப்படமாக வந்தது. இப்படத்தில் அவர், 22 பாடல்களை பாடியிருந்தார். இவர் நடித்த, ஹரிதாஸ் திரைப்படம், சென்னை பிராட்வே தியேட்டரில், மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, சாதனை படைத்தது. கடந்த, 1944-ல், பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், இவருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பின், குற்றமற்றோர் என, விடுதலை செய்யப்பட்டனர். 1959 நவ., 1ம் தேதி, தன், 49வது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.'ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமான தினம் இன்று!


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-நவ-202006:15:04 IST Report Abuse
Bhaskaran கோவில்பட்டியில் ஒருபள்ளி கட்டிட நிதி காக இலவச கச்சேரி செய்து கொடுத்தார் .ஏராளமான ஏழை மாணவர்கள் இன்றும் அந்த பள்ளியில் படிக்கின்றனர் .வாழ்க அவர். புகழ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X