புல்வாமா தாக்குதலில் அரசியல் ஏன்?: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி

Updated : நவ 02, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (9+ 41)
Share
Advertisement
கேவாடியா,: ''புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் சதி அம்பலமாகியுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக, இந்த சம்பவத்தை வைத்து, இங்குள்ள அரசியல் கட்சிகள் மோசமான அரசியலை நடத்தியது வேதனை அளிக்கிறது,'' என, எதிர்க்கட்சிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சவுக்கடி கொடுத்தார்.ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த ஆண்டு பிப்ரவரியில், பாகிஸ்தான்
புல்வாமா தாக்குதல் அரசியல்?  சவுக்கடி! எதிர்க்கட்சி பிரதமர் கேள்வி!

கேவாடியா,: ''புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் சதி அம்பலமாகியுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக, இந்த சம்பவத்தை வைத்து, இங்குள்ள அரசியல் கட்சிகள் மோசமான அரசியலை நடத்தியது வேதனை அளிக்கிறது,'' என, எதிர்க்கட்சிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சவுக்கடி கொடுத்தார்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த ஆண்டு பிப்ரவரியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து, அரசியல் செய்தன. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்பி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன.


எல்லாரும் சாட்சிசமீபத்தில் நடந்த பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டத்தின்போது, 'பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு, புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. 'இதற்கு நீங்கள் எல்லாரும் சாட்சி' என, அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பஹாத் சவுத்ரி கூறினார்.இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபபாய் படேலின், 145வது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கேவாடியாவில்,அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலரஞ்சலி செலுத்தினார். உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக விளங்கும் படேலின் சிலைக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:புல்வாமா தாக்குதல் தொடர்பாக, பலர் எழுப்பிய வீண் சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள், பேச்சுக்களை, இந்த நாடு மறக்காதது. சுயநலத்துக்காக, மிகவும் கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி, கேவலமான அரசியலை சிலர் நடத்தியுள்ளனர்.


மன்னிக்க முடியாதுபயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்களை இழந்த சோகத்தில் நாடு இருந்தபோது, சிலர் மோசமான அரசியலில் ஈடுபட்டதை மன்னிக்க முடியாது.தற்போது பாக்., பார்லிமென்டில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக, என் மீது இத்தனை காலமாக அவதுாறுகளையும், பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வந்தனர். ஆனால், நான் அமைதி காத்தேன். தங்கள் அரசியல் லாபத்துக்காக எந்த அளவுக்கும் செல்வர் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; இது போன்ற விஷயங்களில் அரசியல் வேண்டாம். அது நம் வீரர்கள், பாதுகாப்பு படையினரின் மன உறுதியை குலைத்துவிடும். உங்களுடைய அரசியலுக்காக, தெரிந்தோ, தெரியாமலோ, நம் நாட்டுக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கிவிடாதீர்.தற்போதைய சூழ்நிலையில், அனைத்து நாடுகளும், அனைத்து அரசுகளும், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

அமைதி, சகோதரத்துவம், மற்றவர் மீதான மரியாதை ஆகியவையே, மனிதத்துக்கான அடையாளம். பயங்கரவாதம் மற்றும் வன்முறை, எவருக்கும் நல்லதல்ல.இந்த நேரத்தில், நம் நாட்டின் எல்லையை காக்கும் பணியில் உள்ள வீரர்களின் திறமைகளை, மன உறுதியை நினைவில் கொள்ள வேண்டும். நம் மண்ணை அபகரிக்கும் எந்த எண்ணமும் இங்கு செல்லுபடியாகாது. அவர்களுக்கு நம் வீரர்கள் தகுந்த பதிலடியை அளித்து வருகின்றனர்.எல்லையில் சாலைகள், பாலங்கள் என, பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நம் கவுரவத்தை, இறையாண்மையை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.


ராமருக்கு கோவில்கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு, போலீஸ் துறையைச் சேர்ந்த பலர், தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.நாடு ஒரு பிரச்னையில் உள்ளபோது, 130 கோடி மக்களும் ஒருங்கே இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதனால், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.ஜம்மு - காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துள்ளோம். இந்தப் பிரச்னையை தீர்க்க, சர்தார் படேல் முயன்றார். ஆனால், அவரை செய்ய அனுமதிக்கவில்லை. அவர் விட்டுச் சென்ற பணியை முடிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இனி காஷ்மீர் வளர்ச்சியின் பாதையை நோக்கி நடை போடும்.நாட்டின் கலாசார பாரம்பரியத்தை மீட்கும் வகையில், சோம்நாத் கோவிலை புனரமைக்கும் பணியை, படேல் மேற்கொண்டார். அந்த வழியில், தற்போது உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டி வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


ஐ.ஏ.எஸ்.,களுக்கு அறிவுரைஆமதாபாதில் உள்ள பயிற்சி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையே, கேவாடியாவில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மோடி பேசியதாவது:வெறும் கொள்கைகளால் மட்டும் அரசு செயல்பட முடியாது. அவற்றை நிறைவேற்ற, உங்களை போன்ற திறமையான அதிகாரிகள் தேவை.குறைவான அரசு, அதிக நிர்வாகம் என்ற கோட்பாடுடன் இந்த அரசு செயல்படுகிறது. மக்களுக்கான திட்டங்களில், அரசின் தலையீடு அதிகம் இருக்கக் கூடாது.நீங்கள் பணியாற்றும் இடம் அல்லது துறை சிறியதாக இருக்கலாம். ஆனால், அதிலும் நாட்டின் நலனை மனதில் வைத்து செயல்படுங்கள்.வழக்கமான பணியை மட்டும் செய்யாமல், உங்கள் அடையாளத்தை பதிவு செய்யுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.


பாரதியின் கவிதைபிரதமர் மோடி, தன் பேச்சின்போது,
மகாகவி பாரதியார் எழுதிய, 'எங்கள் நாடு' என்ற
கவிதையை, மேற்கோள் காட்டினார்.
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநுா லெங்கள் நுாலே
பார் மிசை யேதொரு நுால்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.
இந்த கவிதையை தமிழில் கூறி, அதற்கான விளக்கத்தையும் மோடி குறிப்பிட்டார். 'நமக்கு எப்போதும் நாடு தான் முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை பெற முடியும்' என, மோடி குறிப்பிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-நவ-202004:28:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni சோனியாவுக்கு ஒருவிழாவும் தெரியாது அவப்பேத்த ரத்திங்கள் ரெண்டும் மஹாமக்குகள் என்பது உலகப்பிரசித்தம் கறிவேப்பிலை வைக்கலேன்னு ஒருசைடுஆட்டம்போட்டாளா திருமணவீட்டுக்கே அதுபோலவே தான் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளா செயல்படுத்துஙக.கேவலமாயிருக்கு
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-நவ-202019:28:09 IST Report Abuse
Saravanan துண்டு சீட்டில்லாமல் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிய நமது பிரதமர் பாராட்டுக்குரியவர்
Rate this:
Cancel
Vinoth - Chennai,இந்தியா
01-நவ-202015:37:07 IST Report Abuse
Vinoth Our quality of life remains same between prior government Vs present government. in fact, it's going down in key parameters. Please stop talking and show that into action. please ensure every sector of the people in India feels safe and included in the growth.. it's not the Border based on which people feels safer but it's on the internal governance based on which people of any country feels safe.. when domestic people are united and feel safer, no force in the world can not do anything against us.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X