மீண்டும் ஆட்சியமைப்போம்!

Added : அக் 31, 2020
Share
Advertisement
மீண்டும் ஆட்சியமைப்போம்!மத்திய பிரதேச வாக்காளர்கள் எளிமையானவர்கள், ஏழைகள்; ஆனால், புத்திசாலிகள். மக்கள் அளித்த தீர்ப்பையும் மீறி, குதிரை பேரம் வாயிலாக அதிகாரத்தை பிடித்தவர்கள், எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எனவே, ம.பி.,யில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கமல்நாத்ம.பி., முன்னாள் முதல்வர், காங்.,நாளைய முதல்வர்!எந்த ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர்,
மீண்டும் ஆட்சியமைப்போம்!

மீண்டும் ஆட்சியமைப்போம்!

மத்திய பிரதேச வாக்காளர்கள் எளிமையானவர்கள், ஏழைகள்; ஆனால், புத்திசாலிகள். மக்கள் அளித்த தீர்ப்பையும் மீறி, குதிரை பேரம் வாயிலாக அதிகாரத்தை பிடித்தவர்கள், எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எனவே, ம.பி.,யில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கமல்நாத்

ம.பி., முன்னாள் முதல்வர், காங்.,

நாளைய முதல்வர்!

எந்த ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர், தேஜஸ்வி யாதவ். சி.பி.ஐ., வருமான வரித்துறையினர், அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு நிலையில், பீஹார் போன்ற மாநிலத்தில், அந்த இளைஞர், அனைவருக்கும் சவால் விடுகிறார். நாளை அவர், பீஹார் முதல்வரானாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சஞ்சய் ராவத்

எம்.பி., -- சிவசேனா

எதற்காக மன்னிப்பு?

காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் கூறுவது எதற்காக என, எனக்கு புரியவில்லை. தேசிய அளவிலான ஒரு துன்பியல் நிகழ்வை அரசியலாக்காமல் இருந்ததற்காகவா... புல்வாமா தாக்குதலில், வீர மரணமடைந்த நம் வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததற்காகவா?

சசி தரூர்

எம்.பி., -- காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X