பொது செய்தி

இந்தியா

'கொரோனா தடுப்பூசி வாக்குறுதி தேர்தல் விதிகளை மீறியதல்ல'

Updated : நவ 02, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (1+ 2)
Share
Advertisement
புதுடில்லி :'மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவோம் என, பீஹார் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில், பா.ஜ., அளித்துள்ள வாக்குறுதி, தேர்தல் விதிகளை மீறியதல்ல' என, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.குற்றச்சாட்டுபீஹார் சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில், 'பீஹாரில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,
'கொரோனா தடுப்பூசி வாக்குறுதி தேர்தல் விதிகளை மீறியதல்ல'

புதுடில்லி :'மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவோம் என, பீஹார் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில், பா.ஜ., அளித்துள்ள வாக்குறுதி, தேர்தல் விதிகளை மீறியதல்ல' என, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


குற்றச்சாட்டு



பீஹார் சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில், 'பீஹாரில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த பின், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 'கொரோனா தொற்றை, அரசியல் லாபத்துக்கு, பா.ஜ., பயன்படுத்துகிறது' என, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின.இந்நிலையில், தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே, தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் கூறப்பட்டதாவது:பீஹார் தேர்தலுக்காக, அம்மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என, பா.ஜ., அறிவித்து உள்ளது, தேர்தல் விதிகளை மீறியது.


நடவடிக்கை



மத்திய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இதற்காக, பா.ஜ., மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:தேர்தல் நேரத்தில், கட்சிகளும், வேட்பாளர்களும், மக்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பது
வழக்கம் தான். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளாக இருந்தால் தான், அவற்றை, தேர்தல் விதிகளை மீறியதாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது, தேர்தல் விதிகளை மீறியதல்ல; அதனால், நடவடிக்கை எதுவும் தேவைஇல்லை. இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
01-நவ-202006:07:11 IST Report Abuse
blocked user பல காலமாக தடுப்பூசிக்கு இந்தியா கட்டணம் என்று வசூலித்தது கிடையாது. இனியும் வசூலிக்காது என்று நிச்சயம் நம்பலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X