நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பு ஏன்?

Updated : நவ 02, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. நீதிமன்றங்களில் காலியாக உள்ள, நீதிபதி பணி இடங்களை நிரப்புவதில், காலதாமதம் ஏற்படுவதே, இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.நீதித் துறையின் தலைமையிடமாகக் கருதப்படும், உச்ச நீதிமன்றத்தை தவிர்த்து, நாடு முழுதும், 25 மாநிலங்களில், உயர் நீதிமன்றங்கள்
நீதிமன்றங்கள் நிலுவைவழக்குகள்... அதிகரிப்பு!  நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததே காரணம்

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. நீதிமன்றங்களில் காலியாக உள்ள, நீதிபதி பணி இடங்களை நிரப்புவதில், காலதாமதம் ஏற்படுவதே, இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

நீதித் துறையின் தலைமையிடமாகக் கருதப்படும், உச்ச நீதிமன்றத்தை தவிர்த்து, நாடு முழுதும், 25 மாநிலங்களில், உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை, கடந்த, 1ம் தேதி நிலவரப்படி, 34 நீதிபதிகள் பணி நியமனத்துக்கான அனுமதி உள்ளது. ஆனால், 30 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, ஆர்.பானுமதி, அருண் மிஸ்ரா உள்ளிட்ட நால்வர், கடந்த ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, நான்கு நீதிபதிகளுக்கான பணி இடங்கள் காலியாயின.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே, கடந்த ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்றார். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிய, உச்ச நீதிமன்ற கொலீஜியம், இதுவரை எந்த பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை.
உச்ச நீதிமன்ற நிலைமை இப்படி என்றால், நாடு முழுதும் உள்ள, 25 உயர் நீதிமன்றங்களில், 1,079 நீதிபதிகள் நியமனத்துக்கான அனுமதியை, மத்திய சட்ட அமைச்சகம் வழங்கியுள்ளது.
இங்கு, 38 சதவீத நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளன.

கவுஹாத்தி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றங்களில், தற்காலிக தலைமை நீதிபதி கள் பணியில் உள்ளனர். ராஜினாமா, மறைவு மற்றும் பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியான பணி இடங்கள், குறித்த நேரத்தில் நிரப்பப்படாததால், இந்த நிலை தொடர்கிறது.நாட்டில் உள்ள, 12 உயர் நீதிமன்றங்கள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு பங்கு நீதிபதிகள் எண்ணிக்கையுடன் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.அதிலும், பாட்னா, ராஜஸ்தான் மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்றங்களில், 50 சதவீத நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளன.


நீதிபதிகள் நியமனம்



உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனம், செயல்முறை ஒப்பந்த முறையில் நடக்கிறது. இறுதி பரிந்துரை பட்டியல், கவர்னர் வாயிலாக, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்.அங்கிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அந்த பரிந்துரை பட்டியல் அனுப்பி வைக்கப்படும். பரிந்துரை செய்யப்பட்டுள்ள நபரின் பின்னணியை, தலைமை நீதிபதி சரிபார்த்த பின், அதிலிருந்து தன் பரிந்துரையை குறிப்பிட்டு, அதை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.நீதிபதிகள் பணி நியமன உத்தரவுகளை, ஜனாதிபதி வெளியிடுவார். இதுவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனத்துக்கான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.


ஏன் தாமதம்?



நீதிபதிகள் பணி நியமனத்தில் தாமதம் ஏற்படுவது குறித்து, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:அலகாபாத் மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களில், நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளதை தெரிவிக்கவே, அவர்கள், 45 முதல், 50 மாதங்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர்.கேரள உயர் நீதிமன்றத்தில், நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணனை பணி நியமனம் செய்ய, இரண்டு ஆண்டு ஆனது. நீதிபதிகள் பரிந்துரையை, எந்த தவறும் இன்றி செய்ய, அரசு தரப்பும், நீதித் துறையும் அதிக அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே, இந்த கால தாமதத்தை தவிர்க்க, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும், தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது.இவ்வாறு, அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
01-நவ-202020:10:51 IST Report Abuse
r.sundaram கொலிஜியம் முறையை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தனியாக ஒரு ஆணையம் ஏற்படு பண்ணினால் இந்த பிரச்சனைக்கு தேர்வு காண முடியும். தகுந்த காரணமின்றி வழக்கை ஒத்திவைக்க கூடாது. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும், என்மேல் வழக்கு தொடுக்கக்கூடாது என்ற மாதிரியான வழக்குகளை ஏற்க கூடாது. இவர்களை வழக்கை சந்திக்க சொல்ல வேண்டும். கீழ் கோர்ட்டில் வழக்கு தோற்றால் அப்பீல் செய்ய வசதி இருக்கிறதே, ஏன் என்மேல் வழக்கு போட்டது தப்பு என்னை விடுவியுங்கள் என்று கேட்க வேண்டும்?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-நவ-202019:08:02 IST Report Abuse
RajanRajan எதற்கும் முயற்சி செய்து பாருங்க...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
01-நவ-202011:37:04 IST Report Abuse
a natanasabapathy முக்கிய காரணம் தேவை இல்லாமல் வழக்கை தள்ளி போட்டுகொண்டு இருப்பதுதான்ஒரு வழக்கு இருபது வருடங்களுக்கு மேல் நடக்கயார் காரணம்
Rate this:
vijayakrishnan D - chennai,இந்தியா
01-நவ-202012:33:54 IST Report Abuse
vijayakrishnan  Dஎந்த வழக்கும் ஒரு குறிப்பிட்ட கால வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீதி மன்றம் எடுத்தால் மட்டுமே வழக்கு குறையும் மேலும் நீதி நிலைநாட்டமுடியும். அதிகப்படியான நீதிபதிகள் நியமனம் ஒன்றும் இதை சரி செய்ய முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X