அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் விபூதி பூசினாரா?

Updated : நவ 02, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பூஜாரி தந்த விபூதியை நெற்றியில் பூசாமல், கைகளில் தேய்த்து கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின்நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அக்., 30 காலை, 11:00 மணிக்கு அஞ்சலி
 தேவர் நினைவிடம் ஸ்டாலின் விபூதி பூசினாரா?

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பூஜாரி தந்த விபூதியை நெற்றியில் பூசாமல், கைகளில் தேய்த்து கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின்நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அக்., 30 காலை, 11:00 மணிக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,சாத்துார் ராமச்சந்திரன் உடனிருந்தனர். முத்துராமலிங்கத்தேவரின்சிலைக்கு பூஜாரி தீபாராதனை காட்டினார். பின், விபூதியை பிரசாதமாக ஸ்டாலினுக்கும் மற்றவர்களுக்கும் பூஜாரி கொடுத்தார். விபூதியை ஸ்டாலின் வாங்கி நெற்றியில் பூசிக்கொள்ளாமல் கழுத்தில் தேய்த்துக்கொண்டார். மீதமிருந்த விபூதியை கைகளால் தேய்த்துக்கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


பொற்கால ஆட்சி அமைப்போம்'


''தமிழகத்தில் பொல்லாத ஆட்சியை ஒழித்து, பொற்கால ஆட்சி அமைப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., முப்பெரும் விழா, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனா தடுப்பூசி வந்தால், அதை இலவசமாக போடுவேன் என, முதல்வர் பழனிசாமி வாக்குறுதி கொடுக்கிறார்.
மக்கள் கொரோனா பீதியில் இருக்கும்போது, இலவச தடுப்பூசி போடுவேன் என்பது, மக்களின் பயத்தை, அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கொடூரம் அல்லவா. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. கோடிக்கணக்கான பேருக்கு தயாரிப்பு எப்போது முடியும்; விலை என்ன என்பது தெரியாது. தடுப்பூசியை மத்திய அரசு போடப்போகிறதா; மாநில அரசுகளிடம் ஒப்படைக்க போகிறதா என்பதும் தெரியாது.ஆனால், ஊசி இலவசம் என்கிறார் முதல்வர். மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை. அந்த கடமையை கூட விலை பேசுகிறார் முதல்வர். எனவே, தமிழகத்தில், பொல்லாத ஆட்சியை ஒழித்து, பொற்கால ஆட்சியை அமைப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-நவ-202003:38:58 IST Report Abuse
Matt P கைகளில் படலாம். கழுத்தில் படலாம் திருநீறு நெற்றியில் மட்டும் படக்கூடாதா? கஇ யம் கழுத்தும் உடம்பில் ஒரு பகுதி தானே. குல்லா அணியலாம். சிலுவை அணியலாம் . திருநீறு மட்டும் அணியக்கூடாதா? அடுத்தவர்களுக்கு அடுத்தவர்கள் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுத்து மதிப்பும் மரியாதையும் உள்ளவனாக இருக்க முடியும்.மதம் என்பது மனிதர்களை நல் வழிப்படுத்த வந்தது. மக்கள் மகிழ்ச்சையாக இருக்கிறார்கள் என்றால் மதம் சார்ந்த விழாக்களும் கோயில்களுக்கு போஇய் பொறுமையை, பெறுவதாலும் தான். மூளை இருப்பவன் சிந்தித்து அரசியலும் வாழ்க்கையும் நடத்துவான். இல்லாதவர்கள் பகுத்தறிவும் தன்மானம் என்று பேசி கொண்டே இஇருப்பார்கள்.
Rate this:
Cancel
01-நவ-202021:38:06 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஒரு ஜாதி தலைவரின் பிறந்தநாளை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுவதும், அதற்க்கு எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் படையெடுப்பதும், எதோ அந்த ஜாதித்தலைவர் கடவுள் என்கிற அளவிற்கு அங்கே நடக்கு ஆராதனை, அதில் கொடுத்த வீபூதி வைத்துக்கொள்ளவில்லை என்று ஒரு சர்ச்சை... திராவிட கட்சிகளுக்கு, பாஜக கொஞ்சமும் சளைத்ததில்லை என்று சொல்கிறது இந்த நிகழ்வுகள். இவர்கள் எல்லோரும் ஜாதியை ஒழிக்க போகிறார்கள்
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
01-நவ-202019:58:52 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் நெத்தியில் பட்டை கழுத்திலே கொட இடுப்புல காவி இப்படி பக்த்தன நடிப்பதை விட யோக்கிய சிகாமணிய இரு போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X