பொது செய்தி

இந்தியா

58 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடும் குளிர்

Updated : அக் 31, 2020 | Added : அக் 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில், 58 ஆண்டுகளுக்கு பின், அக்., மாதத்தில், சராசரி வெப்பநிலை மிக குறைந்ததால், கடும் குளிர் நிலவியது.டில்லியில், ஆண்டு தோறும் அக்., மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்பதால், குளிர் அதிகரிப்பது வழக்கம். டில்லியில் அக்., மாதத்திற்கான சராசரி வெப்பநிலை, 19.1 டிகிரி செல்சியஸ். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவான சராசரி வெப்பநிலை, 17.2 டிகிரி செல்சியஸ் ஆக
58 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடும் குளிர்

புதுடில்லி:டில்லியில், 58 ஆண்டுகளுக்கு பின், அக்., மாதத்தில், சராசரி வெப்பநிலை மிக குறைந்ததால், கடும் குளிர் நிலவியது.

டில்லியில், ஆண்டு தோறும் அக்., மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்பதால், குளிர் அதிகரிப்பது வழக்கம். டில்லியில் அக்., மாதத்திற்கான சராசரி வெப்பநிலை, 19.1 டிகிரி செல்சியஸ். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவான சராசரி வெப்பநிலை, 17.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
கடந்த, 1962ம் ஆண்டு அக்., மாதத்தில், சராசரி வெப்பநிலை, 16.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.இதன்படி, 58 ஆண்டுகளுக்கு பின், தற்போது மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால், டில்லியில் குளிர் கடுமையாக இருந்தது. அதேபோல், 29ம் தேதி டில்லியில் பதிவான வெப்பநிலை, 12.5 டிகிரி செல்சியஸ். கடந்த, 1994ம் ஆண்டு அக்., மாதம், 31ம் தேதி, 12.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.


latest tamil news


இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதேபோல் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. 'வானில் மேகங்கள் இல்லாமல் இருப்பது, வெப்பநிலை குறைவதற்கு அடிப்படை காரணம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-நவ-202011:56:09 IST Report Abuse
Natarajan Ramanathan குளிர்காலம் பிடித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். எனக்கு புதுடில்லி குளிர்காலம் மிகவும் பிடிக்கும். டில்லியில் கோடைகாலம்தான் கொடுமையானது....
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
01-நவ-202003:25:20 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran ஐயோ நாராயண குளிரில் நடுங்குவதில் எப்படி கொண்டாட்டம் இருக்கும். கொஞ்சம் நினைத்து பார் manamey
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
01-நவ-202002:15:17 IST Report Abuse
மண்ணாந்தை கொராணா காலத்தில் இது மிகவும் ஆபத்தான சீதோஷ்ணநிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X