புதுடில்லி:டில்லியில், 58 ஆண்டுகளுக்கு பின், அக்., மாதத்தில், சராசரி வெப்பநிலை மிக குறைந்ததால், கடும் குளிர் நிலவியது.
டில்லியில், ஆண்டு தோறும் அக்., மாதத்தில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்பதால், குளிர் அதிகரிப்பது வழக்கம். டில்லியில் அக்., மாதத்திற்கான சராசரி வெப்பநிலை, 19.1 டிகிரி செல்சியஸ். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவான சராசரி வெப்பநிலை, 17.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
கடந்த, 1962ம் ஆண்டு அக்., மாதத்தில், சராசரி வெப்பநிலை, 16.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.இதன்படி, 58 ஆண்டுகளுக்கு பின், தற்போது மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால், டில்லியில் குளிர் கடுமையாக இருந்தது. அதேபோல், 29ம் தேதி டில்லியில் பதிவான வெப்பநிலை, 12.5 டிகிரி செல்சியஸ். கடந்த, 1994ம் ஆண்டு அக்., மாதம், 31ம் தேதி, 12.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதேபோல் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. 'வானில் மேகங்கள் இல்லாமல் இருப்பது, வெப்பநிலை குறைவதற்கு அடிப்படை காரணம்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE