பொது செய்தி

இந்தியா

நெருக்கடியிலும் நீதி பரிபாலனம் : தலைமை நீதிபதி பெருமிதம்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
நாக்பூர் : ''கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு இடையிலும், வழக்கு விசாரணைகளும், நீதி பரிபாலனமும் நடந்து வருகிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பெருமிதம் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், 'ஆன்லைன்' மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்து, விசாரணையில் பங்கேற்க உதவும், 'நியாய் கவுசல்' என்ற மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
நெருக்கடி,ம் நீதி பரிபாலனம், தலைமை நீதிபதி, பெருமிதம்

நாக்பூர் : ''கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு இடையிலும், வழக்கு விசாரணைகளும், நீதி பரிபாலனமும் நடந்து வருகிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், 'ஆன்லைன்' மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்து, விசாரணையில் பங்கேற்க உதவும், 'நியாய் கவுசல்' என்ற மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திறந்து வைத்து பேசியதாவது:


latest tamil news


வழக்கு விசாரணைகளுக்கு, கொரோனா வைரஸ், மிகப் பெரிய சவாலை கொடுத்துள்ளது. நேரடி விசாரணை மற்றும் ஆன்லைன் விசாரணை என, இரு தரப்பிலும் சவால்கள் உள்ளன. எனினும், அனைவருக்கும் தேவையான தொழில்நுட்ப வசதி கிடைக்காத வரை, இந்த ஆன்லைன் விசாரணை, உரிய தீர்வாக இருக்காது. உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. எனினும், தொடர்ந்து சமூக இடைவெளியை பராமரித்து, பாதுகாப்பான முறையில் வழக்கு விசாரணைகளை நடத்துவது சாத்தியமில்லை.

இருந்தபோதிலும், 'சொர்க்கமே இடிந்து விழுந்தாலும், நீதி மறுக்கப்படக் கூடாது' என்பதற்கு ஏற்ப, கொரோனா காலத்திலும், சட்ட நடைமுறைகளை பின்பற்றி, நீதி பரிபாலனம் நடந்து வருவது பெருமையாக உள்ளது. கொரோனா, அனைவரையும் பாதித்துள்ளது. கொரோனாவால் வருவாய் இழந்த ஒரு வழக்கறிஞர், காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிவேன். சில மாநிலங்கள், நடமாடும், 'வைபை' வாகனங்கள் மூலம், வழக்கறிஞர்கள் வழக்குகளை கையாள ஏற்பாடு செய்துள்ளன. அனைவருக்கும், பாரபட்சமின்றி தொழில்நுட்ப வசதி கிடைக்க வேண்டும். அதற்கு, நியாய் கவுசல் மையம் துணை புரியும்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-நவ-202014:15:41 IST Report Abuse
Malick Raja நீதித்துறைக்கு வெளியிலுள்ளவர்கள் சொல்வதுதான் நீதி ..அதை ஏற்பதும் நீதியாக இருக்கும் ..இவர் சு .கோர்ட்டின் த. நீதிபதியாக இருந்து தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வது போல இருக்கும் என்று கூடவா தெரியவில்லை .. அப்புறம் நீதி சரியாகவே இருக்கும்
Rate this:
Cancel
vijayakrishnan D - chennai,இந்தியா
01-நவ-202012:22:29 IST Report Abuse
vijayakrishnan  D என்ன எல்லா நீதி மன்றங்களும் இயங்குகிறதா ? அட்வொகேட்ஸ் தூங்குகிறார்கள் . நீதிபதிகள் வீட்டிலிருந்து நீதி பரிபாளையம் செய்து மாத சம்பளம் பெறுகிறார்கள் . பாவம் கேஸ் போட்டவர்கள் நீதி கிடைக்காமல் திண்டாடுகினார்கள் . பல நிர்வாக தீர்ப்பயன்களில் (த்ரிபுனல்ஸ்) பல வருடங்களாக நீதி கிடைக்காமல் பலர் உலகத்தை விட்டு சென்றார்கள் . தீர்ப்பயன்களை மூடினாள் பல கோடி அரசுக்கு மிச்சம் .
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
01-நவ-202008:03:10 IST Report Abuse
Sathya Dhara அய்யா தலைமை நீதிபதி அவர்களே......ஸ்பெக்ட்ரம் ஊழலில்......ஷைனி செய்த வேலைய திருத்தி.....ஊழல் நாயக நாயகியாருக்கு திஹார் சிறையில் ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் பாரத நாட்டு மக்கள் நிம்மதிக் கொள்வார்கள். நீதி பரிபாலனம் விரைவில் இயங்கி ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X