பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரியகோவில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

Added : நவ 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.தஞ்சை பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி
 தஞ்சை பெரியகோவில் பெருவுடையாருக்கு  1,000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.தஞ்சை பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


கங்கைகொண்ட சோழபுரம்



அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும், ஐப்பசி பவுர்ணமி நாளான நேற்று காலை, 9:00 மணியளவில், கணக்கவிநாயகருக்கு அபிஷேகம், பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகிக்கு மகாபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, கோவிலில் உள்ள மடப்பள்ளியில், 300 கிலோ பச்சரியால் சாதம் தயார் செய்து, லிங்கத்தின் மீது சாற்றப்பட்டது. மாலை, 6:15 மணியளவில், அன்னாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
01-நவ-202008:44:46 IST Report Abuse
vadivelu பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போல் நின்று கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்லும் கட்சிக்கே வாக்களிப்பார்கள்.எல்லாம் தமிழகத்தின் விதி.
Rate this:
Cancel
Balaji Dasarathan - Chennai,கனடா
01-நவ-202004:29:09 IST Report Abuse
Balaji Dasarathan சமூக இடைவெளி சாமி பாத்துப்பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X