பொது செய்தி

இந்தியா

குஜ்ஜார் போராட்டம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: குஜ்ஜார் இன மக்கள், இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமூக மக்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரண்டு
gujjar, protest, national defence law, குஜ்ஜார் போராட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம்

புதுடில்லி: குஜ்ஜார் இன மக்கள், இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமூக மக்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.குஜ்ஜார் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது, முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநில அரசு பிரதிநிதிகளுடன், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.இதையடுத்து, ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும், இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், ராஜஸ்தானின், பாரத்பூர், தோல்பூர், சவாய் மாதோபூர், தவுசா, டோங்க், புண்டி மற்றும் ஜலாவர் மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது.கடந்த காலங்களில், குஜ்ஜார் மக்கள் நடத்திய போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-நவ-202016:57:04 IST Report Abuse
Rafi அனைத்து தரப்பு மக்களின் வியர்வையில் கிடைக்கும் வருவாயில் தான் நாடு சென்றுகொண்டிருக்கு என்பதை நாடாளுபவர்கள் உணர மறுக்கின்றார்கள். அனைத்து தரப்பு மக்களின் செழுச்சியோடு தான் நாடு உண்மையாக வளர்ந்ததாக எடுத்தது கொள்ள முடியும். அனைத்து சமூக மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், படிப்பறிவு இல்லாத மக்கள் எப்போது படிப்பது, இந்த மாதிரியான இட ஒதுக்கீடு தான் அந்தந்த சமூகத்தை வளர்க்க முடியும், பல்முக தன்மை கொண்ட நாடு என்று சொல்லிக்கொண்டு அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செல்வது தான் முறை. இருக்க கூடிய கல்வி வேலைவாய்ப்பில் 90 சதவிகிதத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் சதவிகிதத்தை அடிப்படையில் பிரித்து கொடுத்துவிட்டு பத்து சதவிகிதத்தை மட்டும் சிறந்து விளங்குபவர்களுக்கு, மற்றும் அரசின் அவசர சேவைக்காக வைத்து கொள்ளலாம். அதனால் வளர்ச்சி பாழாகி விட போவதில்லை, அந்தந்த சமூகத்தில் அதிக திறமையானவர்கள் மட்டுமே மேலே வரமுடியும். நாடும் அவர்களின் திறமைகளை பயன் படுத்தி கொள்ள முடியும்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
01-நவ-202009:36:05 IST Report Abuse
sankar இடஒதுக்கீடு ஆசைகாட்டி ஓட்டுபறிக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த நாடு இப்படி தான் இருக்கும்
Rate this:
Cancel
Ganesan Marimuthu - KA,இந்தியா
01-நவ-202008:42:02 IST Report Abuse
Ganesan Marimuthu கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற குடும்ப கட்டுப்பாடு உடைய குடும்பத்தினருக்கு மட்டும் ஒருமுறை சலுகை. குடும்பத்தில் பிறர் படித்து இருக்க கூடாது. வேலை கிடைத்த பின் பெரும் சம்பளத்தில் தன் சமூக மக்கள் வளர 25 சதம் கொடுக்க வேண்டும். சாதி எண்ணிக்கையில் அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். சலுகை பொறும்போது வாக்குரிமை கூடாது. கிராம புரங்களில் வேலை செய்ய வேண்டும். வெளிநாடு சென்றால், அரசுக்கு அதிக வரி செலுத்த வேண்டும். மாத வருவாய் இல்லாத பெற்றோருக்கு சம்பளத்தில் 10 சதம் கட்டாயம் தர வேண்டும். மதம் மாற, கலப்பு திருமணம் செய்ய, மறுமணம், விவாக ரத்து செய்ய அனுமதி கொடுத்தால் இட ஒதுக்கீடு பலன் அந்த சமூக மக்களை சென்று அடையாது. பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதற்கு போராடுபவர்கள் தான் பொறுப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X