குஜ்ஜார் போராட்டம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குஜ்ஜார் போராட்டம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: குஜ்ஜார் இன மக்கள், இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமூக மக்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரண்டு
gujjar, protest, national defence law, குஜ்ஜார் போராட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம்

புதுடில்லி: குஜ்ஜார் இன மக்கள், இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமூக மக்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.குஜ்ஜார் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது, முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநில அரசு பிரதிநிதிகளுடன், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.இதையடுத்து, ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும், இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.


latest tamil news



இந்நிலையில், ராஜஸ்தானின், பாரத்பூர், தோல்பூர், சவாய் மாதோபூர், தவுசா, டோங்க், புண்டி மற்றும் ஜலாவர் மாவட்டங்களில், தேசிய பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது.கடந்த காலங்களில், குஜ்ஜார் மக்கள் நடத்திய போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X