சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலனுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண் ; மிஞ்சியதோ ஏமாற்றம்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (74)
Share
Advertisement
ஊட்டி : ஊட்டியில் காதலன் வருவதாக கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். காதலனுக்காக காத்திருந்த அப்பெண், மணமகன் தாலி

ஊட்டி : ஊட்டியில் காதலன் வருவதாக கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news



நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். காதலனுக்காக காத்திருந்த அப்பெண், மணமகன் தாலி கட்டும் நேரத்தில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவரை தடுத்து நிறுத்தினார். திருமணத்தை நிறுத்தியதை கண்டு, பெற்றோரும் , சுற்றத்தாரும் எதிர்த்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் தனது சென்னை காதலன் வந்து வடுவதாக கூறினார்.


latest tamil news



திருமணத்திற்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக கூறிய காதலன் வெகுநேரமாகியும் வரவில்லை. ஆனால் நாள்முழுவதும் காத்திருந்த மணப்பெண் பிரியதர்ஷினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. திருமணம் நின்ற அவமானத்தில் பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரை லவ்டேல் என்ற பகுதியில் விட்டு சென்று, வீட்டிற்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளனர். இருப்பினும் தனது காதலனை தேடி சென்று அவரை திருமணம் செய்யப்போவதாக அந்த பெண் சென்னைக்கு புறப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர். மேலும் மணப்பெண்ணின் பெற்றோரும் அவமானத்தால், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
06-நவ-202014:44:42 IST Report Abuse
mathimandhiri சினிமா, டீ.வ. சீரியல், மக்ட்டரும் இவற்றை மிஞ்சும் லவ் ஜிகாத். இது தெரிந்த கதை.
Rate this:
Cancel
Palani - chennai,இந்தியா
05-நவ-202019:52:06 IST Report Abuse
Palani வயதில் செய்யக்கூடிய த்ரில்லான அனுபவம் , பெற்றோரின் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை ஒரு காண நேரம் தனியே சிந்திக்கவும், உன்னை வளர்க்க எவ்வளவு சிரமத்தை எதிர்கொண்டு இருப்பர் என்று யோசித்து இருக்கவேண்டுமா.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-நவ-202016:47:57 IST Report Abuse
தஞ்சை மன்னர் இதுக்கும் லவ் ஜிகாத்துக்கும் தொடர்பு இருக்குமா என்று புலனாய்வு அமைப்பான சந்து முன்னணி ஆயுவு
Rate this:
vijay - coimbatore,இந்தியா
06-நவ-202009:50:21 IST Report Abuse
vijayதஞ்சை மன்னருக்கு அந்த பட்டம் எப்படி வந்தது? ஓ ஓ..ஜிஹாத் கூட்டத்தை சேர்ந்த ஆளா? புரியுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X