பொது செய்தி

இந்தியா

பெண் குழந்தை பிறக்க வேண்டி துர்கை கோவிலில் குவியும் தம்பதியர்!

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலில் வேண்டினால், பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு,தம்பதியர் வருகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.பாலின வேறுபாட்டால், பிறப்பு முதல், இறப்பு வரை, பெண்கள் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும், இந்த

புதுடில்லி: ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலில் வேண்டினால், பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு,தம்பதியர் வருகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.



latest tamil news


பாலின வேறுபாட்டால், பிறப்பு முதல், இறப்பு வரை, பெண்கள் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும், இந்த வேறுபாட்டால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான், பெண்களை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளை படிக்க வைக்கவும், பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் குழந்தை பிறக்க வேண்டி, ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலுக்கு, தம்பதியர் வருவது ஆச்சரியத்தைஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


ஜார்க்கண்ட் மாநிலம், போக்ராம் மாவட்டம், சாஸ் பகுதியில், சித்ததாத்ரி துர்கை கோவில் உள்ளது. இந்த அம்மனிடம், தம்பதியர் வேண்டினால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த கோவிலில் உள்ள துர்கையை, பெண் குழந்தை அருளும் தெய்வமாக, பக்தர்கள் பார்க்கின்றனர்.கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்தாலும், நவராத்திரி காலத்தில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கையை வழிபட்டு பிரார்த்தித்தால், அடுத்த நவராத்திரியின் போது, வீட்டில் பெண் குழந்தை சத்தம் கேட்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-நவ-202014:29:26 IST Report Abuse
Rasheel ஹிந்து மதம் பெண்களுக்கு அளிக்கும் உரிமை மதிக்கபட வேண்டும். பெண்கள் இல்லாமல் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்ய ஆண்களுக்கு உரிமை இல்லை என்று வேதம் சொல்லுகிறது. ஈசனின் சரிபாதி பெண் என்ற தத்துவம் பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் இருக்கும் உரிமையை விளக்குகிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-நவ-202013:13:50 IST Report Abuse
Ramesh Sargam பெண் பிள்ளைகளை கருவிலேயே கொள்பவர்கள் மத்தியில், இப்படி பெண்பிள்ளைகள் பிறக்கவேண்டும் என்று ஒரு மக்கள்.
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
01-நவ-202007:57:02 IST Report Abuse
Sathya Dhara நிஹரதத்தின் பெருமைக்கு மகுடம் வைத்தது போல செய்தி....தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X