கருப்பினத்தவர் ஓட்டுகளை அள்ள டிரம்ப், பிடன் தீவிர பிரசாரம்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கருப்பின மக்களை ஈர்க்கும் வகையில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 3ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கருப்பின மக்களை ஈர்க்கும் வகையில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 3ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.கொரோனா வைரஸ் பிரச்னையைத் தவிர இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்னையாக கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறி இருந்து வருகிறது.ஜார்ஜ் பிளாய்டு உட்பட கருப்பினத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டது நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் கருப்பின மக்களின் ஓட்டுகள் பல மாகாணங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது.மினசோட்டா மாகாணத்தில் ஒரே நாளில் நான்கு பிரசார கூட்டங்களில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கருப்பின மக்களுக்கு எதிராகவே ஜனநாயகக் கட்சியும், பிடனும் செயல்பட்டு வந்துள்ளார். கருப்பின இளைஞர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.ஆனாலும் உங்களுடைய ஓட்டுகள் ஏன் தனக்கு கிடைக்கவில்லை என்று பிடன் ஆச்சரியப்படுகிறார்.போலி கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. உண்மை நிலவரத்தை சில நாட்களில் தெரிந்துவிடும்.

கருப்பின மக்களுக்கான கட்சி குடியரசு கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே கருப்பின மக்கள் அதிகம் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் ஜோ பிடன் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் செய்ய உள்ளனர்.ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக இருந்த இந்த மாகாணத்தில் கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கு முக்கிய காரணம் கருப்பின மக்களின் ஓட்டு சதவீதம் முந்தைய தேர்தலைவிட 15 சதவீதம் குறைந்ததே. இந்தத் தேர்தலில் கருப்பின மக்கள் அதிகளவில் ஓட்டளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை மனதில் வைத்தே மிச்சிகனில் சமீபத்தில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது கருப்பின மக்களுக்கு எதிராக பிடன் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில் ஹார்வர்டு பல்கலை தலைமையில் பல்வேறு பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பிரமாண்ட 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் ஜோ பிடனுக்கு 51 சதவீதம் பேரும் டிரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருப்பின மக்களில் 86 சதவீதம் பேர் பிடனுக்கும் 9 சதவீதம் பேர் மட்டுமே டிரம்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil news




வெள்ளை நிறத்தவர்களில் 49 சதவீதம் பேர் டிரம்புக்கும், 45 சதவீதம் பேர் பிடனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.விருந்து ரத்துதேர்தல் நாளன்று வாஷிங்டனில் உள்ள தன் ஓட்டலில் பிரமாண்ட விருந்தளிக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் இதற்கு நகர நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் விருந்து நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-202016:26:26 IST Report Abuse
தமிழவேல் ஆதாரமற்ற பொய்களை அவிழ்த்து விடுவதில் ட்ரம்ப் வள்ளவர்... பைடன், கறுப்பினத்தினவரை எதிர்த்து பேசியதாகக் கூறுவது, அவருக்கு ரஷ்ய, சீன தொடர்பு, ஊழல் செய்ததாகக் கூறியது, டாக்டர்கள் பணத்திற்காக கொரோனா சாவுகளை அதிகரிப்பதாக கூறியது, க்ளோரோகின் தினமும் எடுத்துக்கொள்வதால் கொரோனா அண்டவில்லை என்று கூறியவர் கொரோனாவில் மாட்டியது, தனது உபயோகத்திற்காகவே சொந்தத்தில் விமானம் 2 , மற்றும் ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பவர் 7 வருடங்களாக 750 டாலர் மட்டுமே (வருடத்திற்கு) வருமான வரியாக கட்டி வருவது. கொரோனா சாவு குறைந்து வருகின்றது என்று போலி அட்டவணையை நிருபர்களிடம் காட்டி மாட்டிக்கொண்டது...... என எல்லாமே பொய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X