5 மாவட்டங்களில் இன்று கன மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டங்களில் இன்று கன மழை

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (2)
Share
சென்னை : தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக கடற்கரை மற்றும் அதை சுற்றிய தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன்

சென்னை : தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக கடற்கரை மற்றும் அதை சுற்றிய தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல சுழற்சியால், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கன மழை பெய்யும். கன்னியாகுமரி, துாத்துக்குடியில், சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில், லேசான மழையும் பெய்யும்.


latest tamil news



சென்னை மற்றும் புறநகரில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 34; குறைந்தபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று மதுரை, 10 செ.மீ., மழை; மதுரை விமான நிலையம், 8; திருமங்கலம், வாலிநோக்கம், வத்திராயிருப்பு, 7; விளாத்திகுளம், கோவில்பட்டி, சாத்துார், சோழவந்தான், எட்டயபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X