'அற்புத விளக்கு' மோசடி: பணத்தை இழந்த டாக்டர்

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
மீரட்: அலாவுதீன் அற்புத விளக்கு மற்றும் பூதத்தை பார்த்து, பெரும் பணக்காரனாகும் ஆசையில், 31 லட்சம் ரூபாய் இழந்துள்ளார், உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த, ஒரு டாக்டர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மீரட்டைச் சேர்ந்தவர், டாக்டர் கான். கற்பனை கதையில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகக் கூறி,

மீரட்: அலாவுதீன் அற்புத விளக்கு மற்றும் பூதத்தை பார்த்து, பெரும் பணக்காரனாகும் ஆசையில், 31 லட்சம் ரூபாய் இழந்துள்ளார், உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த, ஒரு டாக்டர்.



latest tamil news



உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மீரட்டைச் சேர்ந்தவர், டாக்டர் கான். கற்பனை கதையில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகக் கூறி, அந்த கதையில் வரும் பூதத்தையும் கண்முன் நிறுத்தி, அவரிடம் இருந்து, 31 லட்சம் ரூபாயை பெற்று, ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

இது குறித்து, டாக்டர் கான் கூறியதாவது:மீரட்டைச் சேர்ந்த இக்ராமுதீன், அனீஸ் ஆகியோர், தங்கள் தாய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேட்டனர். அவர்களது வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தேன். அப்போது, ஒரு மந்திரவாதியை தங்களுக்கு தெரியும் என, என்னிடம் கூறினர்.அந்த மந்திரவாதியிடம், அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதாக கூறினர். அந்த விளக்கை எனக்கு காட்டினர்.


latest tamil news



மேலும், ஒருமுறை பூதத்தையும் வரவழைத்து காட்டினர். அந்த விளக்குக்கு, 1.5 கோடி ரூபாய் விலை பேசினர். நான், 31 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.பிறகு தான், இது அனைத்தும் மோசடி என்பது தெரியவந்தது. அவர்கள் தாய் என்று கூறிய பெண்ணும் பொய். மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரே, பூதம் போல் வேஷம் போட்டு வந்துள்ளார்.இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.'பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில், அந்த கும்பலின் ஆசை வார்த்தைக்கு மயங்கி டாக்டர் பணத்தை பறிகொடுத்துள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-202018:15:28 IST Report Abuse
தமிழவேல் நீட் பரீட்சை எழுதாம டாக்டர் ஆகி இருப்பான்
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
01-நவ-202017:46:34 IST Report Abuse
Sukumar Talpady இந்த "படித்த" இவ்வளவு பணம் ஏமாந்தது வேண்டியது தான் . அலாவுதீனின் அற்புத விளக்கு ஒரு கற்பனையான கதை என்று கூடத் தெரியாமல் இவ்வளவு பணம் ஏமாந்தார் என்றால் இவரை எப்படி சொல்வது . பூதத்தை ஒரு முறை வரவழைத்து காண்பித்தார்களாம் . நமது மொபைல் எண்ணுக்கு $ 500,000/- பரிசு லாட்டரியில் கிடைத்திருக்கிறது என்று ஒரு sms வரும் . அதை நம்பி பணம் ஏமாந்தவர்கள் பலர். அது போலத்தான் இருக்கிறது இந்த கதையும்.
Rate this:
Cancel
indhumadhi - Paris,பிரான்ஸ்
01-நவ-202017:46:25 IST Report Abuse
indhumadhi பூதம் நேர்ல வந்துச்சா..நம்பிட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X