' பீஹாரில் இளவரசர் படை தோற்கும் ' - மோடி

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சாப்ரா: இளவரசர்கள் ராகுலும் அகிலேசும் உ.பி.,யில் தோல்வியடைந்தது போல், பீஹாரிலும் ராகுலும், தேஜஸ்வியும் தோல்வி அடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீஹார் மாநிலம் சாப்ராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : பீஹார் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு எங்களது அரசு உதவியது. இதனால், எங்களுக்கு நீங்கள் தரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள்
பிரதமர்மோடி, பீஹார், நரேந்திரமோடி, இளவரசர்கள், ராகுல், தேஜஸ்வி

சாப்ரா: இளவரசர்கள் ராகுலும் அகிலேசும் உ.பி.,யில் தோல்வியடைந்தது போல், பீஹாரிலும் ராகுலும், தேஜஸ்வியும் தோல்வி அடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலம் சாப்ராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :
பீஹார் ஏழை மக்களின் வளர்ச்சிக்கு எங்களது அரசு உதவியது. இதனால், எங்களுக்கு நீங்கள் தரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளன. முதல்வர் நிதிஷ்குமாரை, மக்கள் ஏற்று கொண்டனர். தங்கள் குடும்பத்திற்காக மட்டுமே எதிர்க்கட்சிகள் உழைக்கின்றன. அவர்கள் எப்போதும் மாநிலத்திற்காக உழைத்தது இல்லை. பீஹாரை பற்றியும், மக்களை பற்றியும் எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை. ஆனால் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். தேஜவின் சக்தியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. இதனால், என்னை விமர்சிக்கின்றனர்.


latest tamil news



ரவுடியிச ஆட்சியின் இளவரசர் பீஹாரில் தோல்வி அடைவார். ராகுல், அகிலேஷ் என இரட்டை இளவரசர்கள் ஏற்கனவே உ.பி.,யில் தோல்வியடைந்துள்ளனர். அதேபோல், இங்கும் அந்த இரட்டை இளவரசர்கள் தோல்வியடைவார்கள். பீஹாரில் நதியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கங்கை நதியை தூய்மைபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

தே.ஜ., ஆட்சியில் தான் தன்னிறைவு இந்தியா சாத்தியமாகும். ரவுடியிச ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் மாநிலத்தை இருளில் தள்ள முயற்சி செய்கின்றன. மாநிலத்தை அதிவேக வளர்ச்சியடைய செய்ய தேஜ கூட்டணி உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
01-நவ-202017:21:49 IST Report Abuse
amuthan நம்பிக்கையை பார்த்த ஓட்டு எந்திரத்தை செட் பண்ணியாச்சு போலெ
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-நவ-202014:35:07 IST Report Abuse
unmaitamil கண்டிப்பாக தோற்போம் என தெரிந்த இளவரசர், சிம்லாவில் உள்ள தன் அக்காவின் அரண்மனையில் போய் ஒளிந்துகொண்டார். பட்டயா செல்ல விமானம் இல்லை. இல்லாவிடில் இளவரசர் இந்நேரம், பட்டயாவில் பட்டறை போட்டுஇருப்பார்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
01-நவ-202011:46:47 IST Report Abuse
siriyaar தமிழ்நாட்டில் ராகுல் இளவரசர் மற்றும் உளறலரசர் சுடலை தலைமையிலான கூட்டணி தோற்குமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X