சென்னை: தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான இன்றைய நாள் தமிழ்நாடு நாளாக தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை குறிக்கும் வகையில் டுவிட்டரில் #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 மற்றும் #TamilNaduDay போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளது.
இந்தியா விடுதலை அடைந்த போது பல்வேறு மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. பின்னர் மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் மாகாணங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை மாகாண பகுதிகளும் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் மாநிலமாக 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உதயமானது. பின்னர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என அப்போதைய முதல்வர் அண்ணாதுரை பெயர் மாற்றினார்.

தமிழ்நாடு மாநிலமாக உருவான நவ.,1ம் தேதியை கடந்தாண்டு முதல் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. நெட்டிசன்களும் பெருவாரியாக தமிழகத்தின் பெருமை மற்றும் தமிழக தலைவர்களின் பெருமை, தமிழ் மொழியின் சிறப்புகளை குறிப்பிட்டு டுவிட்டரில் #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 மற்றும் #TamilNaduDay பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE