அம்மா நான் இருக்கேன்யா

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மகனின் டாக்டர் கனவை நனவாக்க வீட்டு வேலை செய்யும் நாகலட்சுமிநடந்து முடிந்த நீட் தேர்வில் 508 மார்க்குகள் எடுத்த அரசு பள்ளி மாணவன் நரசிம்மனின் தாய் நாகலட்சுமி வீட்டு வேலை செய்பவர் தனது மகனின் படிப்பிற்காக நகைகளை விற்றும்,கடன் வாங்கியும் படிக்க வைத்தவர் எப்படியும் தன் மகன் டாக்டராகிவிடுவான் என்ற கனவில் இருக்கிறார். சென்னை சூளைமேடு அருணாசலம் நகர் 2 வது
latest tamil news


மகனின் டாக்டர் கனவை நனவாக்க வீட்டு வேலை செய்யும் நாகலட்சுமி

நடந்து முடிந்த நீட் தேர்வில் 508 மார்க்குகள் எடுத்த அரசு பள்ளி மாணவன் நரசிம்மனின் தாய் நாகலட்சுமி வீட்டு வேலை செய்பவர்

தனது மகனின் படிப்பிற்காக நகைகளை விற்றும்,கடன் வாங்கியும் படிக்க வைத்தவர் எப்படியும் தன் மகன் டாக்டராகிவிடுவான் என்ற கனவில் இருக்கிறார்.


latest tamil newsசென்னை சூளைமேடு அருணாசலம் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் ஆட்டோ ஒட்டுனர் இவரது மனைவி நாகலட்சுமி பல வீடுகளில் வேலை செய்துவருபவர்.

இவர்கள் இருவருமே அதிகம் படிக்காதவர்கள் என்பதால் தங்களது இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் நன்கு படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் இவர்களது ஒரே லட்சியம்.


latest tamil newsஅதிலும் மகன் நரசிம்மன் சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்ற தாகத்துடன் படித்தார்,கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார்.

பிளஸ் டூவில் நல்ல மார்க்குகள் எடுத்த நிலையில் நீட் தேர்வு எழுதினார் ஆனால் அந்த வருடம் 220 வது இடத்தைத்தான் பெற்றார்.

சோர்ந்து போயிருந்த நரசிம்மனை உற்சாகப்படுத்தியது அவரது தாய் நாகலட்சுமிதான்.அம்மா நான் இருக்கேன் கவலைப்படாதே திரும்பவும் நீட் தேர்வு எழுதுப்பா என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

கோச்சிங் சென்டரில் சேர்ந்தால் நல்ல மார்க்குகள் வாங்கலாம் என்று வந்த ஆலோசனையின் பேரில் கோச்சிங் சென்டரில் சேர்ந்தார் அதற்கான கட்டணமாக ஒரு லட்ச ரூபாய்க்காக வீட்டில் இருந்த நகைகளை பாங்கில் அடமானம் வைத்தார் அதுவும் போதாது என்ற நிலையில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கினார்.

வாங்கிய கடனை அடைப்பதற்காக கூடுதலாக பல வீடுகளில் கூட்டிப் பெருக்குவது உள்ளீட்ட வேலைகளை செய்தார் அப்பா வெங்கடேசனும் வீட்டிற்கே வராமல் விடிய விடிய ஆட்டோ ஒட்டினார்.

பெற்றோர்களின் சிரமத்தை குறைப்பதற்காக நரசிம்மனும் மருந்துக் கடையில் பகுதி நேர வேலை பார்த்தார்.

ஒரு வருடம் நீட் தேர்விற்காக கடுமையாக படித்தார் இரவு முழுவதும் துாங்காமல் கூட படிப்பார் இவரது படிப்பிற்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சின்ன வீட்டில் இருந்த ஒரே சந்தோஷமான டி.வி,யைக் கூட யாரும் பார்க்காமல் மொத்த குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர்.ஒரு வருடம் படிப்பு படிப்பு என்று மட்டுமே நரசிம்மன் இருந்துள்ளார்

இதன் விளைவு 508 மார்க்குகள் எடுத்துள்ளார் இந்த மதிப்பெண்ணிற்கு மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடும் சேர்ந்துள்ளதால் சீட் கிடைப்பது உறுதி என்ற நிலை உள்ளது.

இதன் காரணமாக உழைப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்த குடும்பத்தில் சந்தோஷம் பூத்துள்ளது அதிலும் தாய் நாகலட்சுமியின் கண்களில் ஆனந்த கண்ணீர் என் மகன் டாக்டராகி ஏழை பாழைகளுக்கு எல்லாம் நல்லா வைத்தியம் பார்ப்பேன் என்றார் ஆனந்தகண்ணீருடன்.

மாணவர் நரசிம்மனிடம் பேசுவதற்கான எண்:6379954104.

-எல்.முருகராஜ்.Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
02-நவ-202014:39:11 IST Report Abuse
Dr. Suriya நீட்டால் தான் இவரை போன்றவர்களின் கனவு நிறைவேறுகிறது என்று சுடலைக்கு தெரியுமா?
Rate this:
Cancel
PalaniKuppuswamy - chennai,இந்தியா
02-நவ-202006:21:10 IST Report Abuse
PalaniKuppuswamy எது மாதிரியான அடித்தட்டு மக்குளுக்கு மருத்துவர் இடம் கிடைத்தது நீட் தெரிவினால் ...திருட்டு போலி கலவி தந்தைகளின் காட்டு கூச்சல் எங்கே ..திருட்டு திராவிட கூட்டம் ... மக்களின் உண்மையான அக்கறை கொண்ட மத்திய அரசின் சேவை வாழ்க ....மேலும் பல்லாண்டு தொடர்க
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
02-நவ-202004:53:35 IST Report Abuse
NicoleThomson வாழிய வாழியவே , இவரை போன்றோருக்கு தான் இட ஒதுக்கீடு வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X