ஆட்சிக்கு வந்தால் ஓய்வு வயதை அதிகரிப்போம்: தேஜஸ்வி

Updated : நவ 01, 2020 | Added : நவ 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியமைத்தால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம் என அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறினார்.பீஹாரில் நவ.,3ம் தேதி 2ம் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார்.
TejashwiYadav, Increase, RetirementAge, GovernmentEmployees, தேஜஸ்வி யாதவ், அரசு ஊழியர்கள், ஓய்வு, வயது, அதிகரிக்கப்படும்

பாட்னா: பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியமைத்தால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம் என அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறினார்.

பீஹாரில் நவ.,3ம் தேதி 2ம் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். மறுமுனையில் காங்., மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை ஆதரித்து காங்., எம்பி., ராகுல் பிரசாரம் செய்து வருகிறார். 2ம் கட்ட பிரசாரம் இன்றுடன் (நவ.,01) முடிவடையவுள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:


latest tamil news


முதல்வர் நிதிஷ்குமார், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 50 ஆகக் குறைத்து ஓர் ஆணையை வெளியிட்டார். ஆனால் அவரே 70 வயதைக் கடந்துவிட்டார். இம்முறை பொதுமக்கள் அவரை ஓய்வு பெற வைக்கப் போகிறார்கள். நாங்கள் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம். இன்று பீஹாரில் உயர்கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளதென்றால் அதற்குக் காரணம் முதல்வர் நிதிஷ்குமார் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-நவ-202005:30:39 IST Report Abuse
நாகப்பட்டினம் ஜகத்ரட்சகன் வேலை இல்லாதவர்கள் பல கோடி இளைஞர்கள் வறுமை பிடியில் தவித்து கொண்டிருக்கிறார்கள்...இதுதான் தேர்தல் வாக்குறுதியின் உச்சம் ...."அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம்"
Rate this:
Cancel
01-நவ-202022:02:57 IST Report Abuse
kulandhai Kannan 10ம் கிளாஸ் ஃபெயில் எல்லாம் தலைவனானால் இப்படித்தான் இருக்கும். ஒரு புறம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று கூறிவிட்டு மறுபுறம் இப்படி சொல்லும் அதிமேதாவி.
Rate this:
Cancel
rengasamy.s - theni,இந்தியா
01-நவ-202022:01:22 IST Report Abuse
rengasamy.s பேசாம சாகுற வரைக்கும் அரசு வேலை குடுங்க நாடு நாசமா போகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X