கொரோனாவால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை, சற்று அடக்கியே வாசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனாலும், பிரதமர் மோடி, தன் வழக்கமான பாணியிலேயே இந்த தீபாவளியையும் கொண்டாட திட்டமிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே, தீபாவளி அன்று, பிரதமர் டில்லியில் இருப்பதில்லை. ராணுவ வீரர்களுடன், தீபாவளி கொண்டாடி வருகிறார். குடும்பத்தை மறந்து, மக்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான குளிரில் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுடன், தீபாவளி தினத்தை கழித்து வருகிறார் மோடி.
இதுவரை, எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து வந்த மோடி, இந்த முறை எங்கு போகப் போகிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.தீபாவளியன்று கடற்படை வீரர்களை, அவர்கள் பணியாற்றும் கப்பலில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா - -இலங்கை கடல் எல்லையில், இந்திய கடற்படை கப்பலில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்கின்றன, மத்திய அரசு வட்டாரங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE