பாட்னா:ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும்,
நிதிஷ்குமார் முதல்வராக நீடிப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள், வரும்,
10ம் தேதி வெளியாகவுள்ளன. நிதிஷ்குமார், 15 ஆண்டுகளாக, முதல்வராக இருந்து
வருகிறார். இதனால், மக்களிடையே அவருக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. மேலும்,
பிரசார கூட்டங்களில் கோபப்படும் நிதிஷ், அவரது வழக்கமான பிரசாரத்தை
கைவிட்டு, தனி நபர் விமர்சனத்தில் இறங்கியுள்ளார். ஆனாலும், பிரதமர்
மோடியின் பிரசாரத்தால், நிதிஷ்குமார் காப்பாற்றப்படுவார் என்கின்றனர்.
தன்
பிரசார கூட்டங்களுக்கு, பிரதமர் மோடி, கடுமையான கட்டுப்பாடுகளை
விதித்துள்ளார். 'கூட்டங்களுக்கு அதிக மக்கள் வரக் கூடாது. முக கவசம், சமூக
இடைவெளி அவசியம்' என, மோடி கறாராக இருப்பதால், குறைவான அளவிலேயே மக்கள்
கூட்டம் காணப்படுகிறது. எதிர்தரப்பில், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாரத்தில்,
எந்த கொரோனா விதிமுறையையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் கூட்டம் அலை
மோதுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும்,
நிதிஷ்குமார் முதல்வராக நீடிப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளன. 'இவருக்கு
வயதாகி விட்டது. ஆறு முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். எனவே, இளைஞர்
ஒருவர் தான் பதவியில் அமர வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறதாம்.
நிதிஷ் குமாரை மத்திய அமைச்சராக்கி விட்டு, முதல்வர் பதவியில், பா.ஜ.,வைச்
சேர்ந்த ஒருவரை அமர வைக்கவும், கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE