சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரசார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 6, 7 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை கண்டறிவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடத்த அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், தேர்தலில் கூட்டணி, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. மேலும், அவரே முதல்வர் வேட்பாளராகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (நவ.,2) முதல் 3 நாட்களுக்கு கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கமலுக்கு பிரசார வாகனம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வெள்ளையில் இருந்து சிவப்புக்கு மாற்றம்

அரசியல் தலைவர்கள் எப்போதும் வெள்ளை நிற வாகனத்தையே பிரசாரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். கமல் கண்ணைக்கவரும் விதமாக முழுவதும் சிவப்பு வண்ணத்தில் வாகனத்தை தயார் செய்துள்ளார். வாகனத்தில் கட்சி சின்னமான ‛டார்ச்லைட்' அச்சிடப்பட்டு, ‛தலை நிமிரட்டும் தமிழகம், மக்கள் நீதி மலர.. தக்க தருணம் இதுவே' என்னும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அதிக நீளம் கொண்ட இந்த வேனில் நாலாபுறமும் ஸ்பீக்கர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE