நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்திய பெண்

Updated : நவ 02, 2020 | Added : நவ 02, 2020 | கருத்துகள் (18) | |
Advertisement
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில்
PriyancaRadhakrishnan, NewZealand, Minister, FirstEver, IndianOrigin,

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த பின்னர் ஆக்லாந்தில் சமூக சேவகராக இந்திய மக்களிடையே செயல்பட்டு வந்தார். 2006ல் இவர் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். 2014ல் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.\


latest tamil news



2017ல் எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் இவர் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர தொழில் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkata Jayaraman - Toronto,கனடா
02-நவ-202020:55:32 IST Report Abuse
Venkata Jayaraman தேர்தலில் தோற்று, கட்சியால் நியமிக்கப்பெற்ற உறுப்பினர்
Rate this:
Cancel
02-நவ-202020:41:29 IST Report Abuse
Ganesan Madurai நெல்லை ரவி போன்றவனுங்க இன்னும் பார்பனர்கள் மீது வீண் பழி போடப் பார்த்து, தான் ஒரு நிறவெறி சாதிவெறி பிடித்தவர்கள் என்ற உண்மையை தானாக வெளிக்காட்ட உதவிய தினமலருக்கு நன்றி.
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
03-நவ-202003:00:49 IST Report Abuse
கதிரழகன், SSLCபிராமணங்க பாவமா தேமேன்னு தாசில்தார் ஆபீசுல கிளார்க்கு, ரயில்வே கார்டு, போஸ்டு மாஸ்டர் ன்னு அல்ப சம்பளத்துக்கு இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருந்தாங்க. இந்த திராவிஷங்க வந்து வெறுப்பை கிளப்பி ஊரை விட்டு தொரத்தினாங்க. அப்பத்தான் அவங்களுக்கே தெரிஞ்சது அவங்க அருமை. நாப்பது வருசம் போனாவிட்டு உலகத்துக்கே தெரியுது. அமேரிக்கா காரன் வா வா துணை ஜனாதிபதி ஆகி எங்களுக்கு வழி சொல்லி குடு ன்னு கெஞ்சரான். கூகுள் காரன், நியூசீலாந்து காரன் எல்லாம் பதவி கொடுக்கிறான்....
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
03-நவ-202010:03:44 IST Report Abuse
Muralidharan raghavanஎனக்கு தெரிந்த நண்பர் (பிராமின்) வீட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவரை ஓட்டுநராக பணிக்கு வைத்துள்ளார்கள். அவர் வீட்டின் சமையல்கட்டு வரை சென்று வருவதை பார்த்திருக்கிறேன். அந்த நண்பர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையும் ஓட்டுநராக பணிக்கு வைத்துள்ளார். என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் பணிக்கு அமர்த்தப்பட்ட பின்பு, ஜாதிவெறி பிடித்த பிற்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓட்டுநர் பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆகையால் எல்லோரும் பொதுவாக கூறுவதுபோல் பிராமிணர்களுக்கு ஜாதி வெறி உள்ளது போன்று அனைவரும் கூறிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் ஜாதிவெறி யாருக்கு என்பது இப்போதுதான் புரிகிறது. நான் கூறியுள்ளது உண்மை...
Rate this:
Cancel
02-நவ-202020:12:09 IST Report Abuse
Ganesan Madurai இந்தியர்? அவர் ஒரு இந்திய வம்சாவளி நீயுஸிலாந்து குடிமகன். அவ்வளவே. அப்டீன்னா ஒரு நீயுஸிலாந்து குடிமகன் இங்கு மந்திரியாக முடியுமா?
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
03-நவ-202006:07:16 IST Report Abuse
Fastrackமைனா சோனியாவாகி காங்கிரஸ் தலைவரானது மாதிரி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X