'சரக்கை' பதுக்கிய அதிகாரி: சம்பாதிக்க வழிதேடிய சூத்ரதாரி

Updated : நவ 03, 2020 | Added : நவ 03, 2020
Share
Advertisement
நிலம் சம்பந்தமான ஆவணத்தில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்த, கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற சித்ரா, துணைக்கு, மித்ராவையும் அழைத்து சென்றிருந்தாள். அதிகாரி வர தாமதமான தால, காத்திருந்தனர்கும்பலாக சிலர் வந்துபோக, ''என்னக்கா, இத்தன பேர் கும்பலா வந்துட்டு போறாங்க…''ஆதங்கப்பட்டாள் மித்ரா.''அவங்க பழைய பஸ் ஸ்டாண்ட்ல கடை வச்சிருந்த கடைக்காரங்க. ஸ்மார்ட் சிட்டி
 'சரக்கை' பதுக்கிய அதிகாரி:  சம்பாதிக்க வழிதேடிய சூத்ரதாரி

நிலம் சம்பந்தமான ஆவணத்தில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்த, கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற சித்ரா, துணைக்கு, மித்ராவையும் அழைத்து சென்றிருந்தாள்.

அதிகாரி வர தாமதமான தால, காத்திருந்தனர்கும்பலாக சிலர் வந்துபோக, ''என்னக்கா, இத்தன பேர் கும்பலா வந்துட்டு போறாங்க…''ஆதங்கப்பட்டாள் மித்ரா.

''அவங்க பழைய பஸ் ஸ்டாண்ட்ல கடை வச்சிருந்த கடைக்காரங்க. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல பஸ் ஸ்டாண்ட் புதுசா கட்டறாங்க. அதனால, கோவில்வழி தற்காலிக பஸ் ஸ்டாண்டுல கடை வைக்க பெர்மிஷன் கேட்டுட்டு இருக்காங்க''

''அந்த இடம் பல்லடம் லிமிட்டில் வர்றதால, தொகுதி வி.ஐ.பி.,யை பார்க்க போனாங்க. ஆபீசில இருந்த கட்சிக்காரங்க, லட்சக்கணக்கில் கேட்டதும், அப்படியே, 'ஷாக்' ஆகிட்டாங்க. அந்த விவகாரமாத்தான் கலெக்டர்கிட்ட, மனு கொடுக்க வந்திருக்காங்க,'' விளக்கினாள் சித்ரா.

அப்போது, காங்கயம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டமாக சென்றனர். ஒரு விவசாயியிடம் பேச்சு கொடுத்த பின் ''அக்கா, கணியூரில் கார்பன் பேக்டரியில வெளியேறும் மாசு கட்டுப்படுத்த சொல்லிக்கிட்டே இருக்காங்க,''

''ஆனா, சில அதிகாரிகளோட கை சுத்தமில்லாததால, எந்த ஆக்ஷனும் எடுக்கலை. அதனால, எல்ேலாரும், கலெக்டர் மேல கடுப்புல இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''இருக்காதா பின்னே, வருஷக்கணக்கில மனு குடுத்து அவங்களும் சலிச்சு போயிட்டாங்க,'' என சித்ரா பேசி கொண்டிருக்கு போது, போலீசார் சிலர், கூட்டத்தை கலைத்து விட்டனர்.

''சிட்டிக்குள்ள தப்பு நடக்காம இருக்க, நம்ம கமிஷனர் ஸ்பெஷல் டீம் போட்டு இருக்காராம்'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''ஓ…அப்படியா, பரவாயில்லையே…''

''அதில ஒரு மேட்டரை கேளு. அந்த டீம்ல, 'வீர'மான ஸ்டேஷன்ல இருந்து, டிரான்ஸ்பர் ஆகி வந்த ஒரு குட்டி ஆபீசரும் இருக்காரு. கஞ்சா, லாட்டரியில எப்படி சம்பாதிக்கிறதுன்னு ரூட் தெரிஞ்சு வைச்சுட்டு, அள்ளி குவிக்கிறாராம்,''

''ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட, கஞ்சா வித்து, மாட்டிக்கிட்ட 'ேஹாம் கார்ட்ல' வேலை பார்த்தவர, ஒருநாள் முழுக்க தன்னோட கஸ்டடில வைச்சு, பணம் கறக்கலாம்னு 'ட்ரை' பண்ணிட்டு, முடியலேன்னு தெரிஞ்சதால, 'கேஸ்' போட்டிருக்காருன்னா பார்த்துக்கோங்க,'' என்றாள் மித்ரா.

இங்க அழகுராஜான்னு யாராச்சு இருக்கீங்களா,' என, நில அளவை பிரிவுக்குள் இருந்து அலுவலர் அழைக்க, ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தவர், மிடுக்காக, 'யெஸ்' என்றவாறு குரல் கொடுத்து உள்ளே சென்றார்.

''போலீசுக்கு தெரியாத ரூட்டா மித்து. பெருமாநல்லுார் லிமிட்ல, ஒரு நம்பர் லாட்டரி தொழில், தோட்டத்தில் கொடிகட்டி பறக்குதாம். அதில, உள்ளூர் பிரஸிடென்ட்டும் பார்ட்னராம்.சிணுங்கிய தன் மொபைல் போனை எடுத்த மித்ரா, 'யாரு…வேலு ரமேஷா, நான் கலெக்டர் ஆபிசுல இருக்கேன், அப்றமா கூப்பிடறேன்பா' எனக்கூறி, இணைப்பை துண்டித்தாள்.
''இந்த கேம்பஸ்ல இருக்க, மக்களுக்கு சேதி சொல்ற ஆபீசில ஒரே களேபரமாமே...''

''ஆமாங்க்கா… சரியா வேலைக்கே வராத படம் புடிக்கிறவர், 'சும்மா' கணக்கு காண்பிச்சுட்டு இருக்காங்க. கொஞ்ச முன்னாடி, அவர 'சஸ்பெண்ட்' செஞ்சுட்டாங்க. அவருக்கு பதிலா, தற்காலிகமா ஒருத்தர வேலைக்கு வச்சாங்க. அவரு என்னடான்னா...போற பக்கமெல்லாம் ரெடி...ஸ்டார்ட்... ஆக்ஷன்னு சொல்லி, பாக்கெட்ட 'புல்' பண்ணிட்டாரு. இத தெரிஞ்சு, அவரையும் துாக்கிட்டாங்க''

''டைரக்டர் லெவல்ல ஆக்ஷன் எடுத்தாதான் சரியா வரும்போல,'' என்றாள் சித்ரா.

''என்னக்கா… இத்தன நேரமாகியும் ஆபீசரு வரல,'' என சலித்து கொண்ட மித்ரா, அலுவலகத்தில் விசாரித்தாள். 'மண்டல ஆபீஸ் வரைக்கும் போயிருக்காருமா; 10 நிமிஷத்தில வந்துடுவாரு,' என ஊழியர் கூறவே, திரும்பி வந்து அமர்ந்தாள்.

''இதாச்சும் பரவாயில்ல மித்து. தனக்கு அசிஸ்டென்ட் வைச்சு, சிலர் வேலை பாக்கிறங்க,'' என்றாள் சித்ரா.

''இது, எங்கீங்க்கா?''

''தாரா...த்தில், பெரிய ரெவின்யூ ஆபீசர் ஒருத்தர், மடத்துக்குளம் ஊர்ல இருந்து வர்றாரு. ரொம்ப துாரத்துல இருந்த வர்றதால, வேலைய அவரால சரியா பாக்க முடியலையாம். இதனால, வெளியாள் ஒருத்தர, அசிஸ்டென்டா வைச்சு இருக்காராம். அவருக்கு, இவரே சம்பளமும் கொடுக்கிறாராம். ஆனா, சம்பள பணம் எங்கிருந்து வருதுன்னுதான் தெரியல…'' என்றாள் சித்ரா.

அப்போது, அவ்வழியே சென்ற ஒரு பெண், மொபைல் போனில் சத்தமாக, 'ஹலோ, ராஜேந்திரபூபதியா? எத்தன தடவ சொல்றது. இப்படி ஓவரா பணம் வாங்காதேன்னு. கேக்கலைன்னா, மாட்டிப்பீங்க, பாத்து,' என சத்தமாக பேசிக்கொண்டு சென்றார்.

''அக்கா, அதே ஊர்ல இருக்க அமராவதி ஆத்துல இருந்து டூ வீலர்ல தினமும், மணல் அள்ளிட்டு போறாங்களாம். புரோக்கர் மாதிரி வேல செய்ற ஒருத்தருக்கு ஒரு வண்டிக்கு ஐநுாறு கொடுத்துடணுமாம். அதில, போலீசுக்கு பங்கு கரெக்டா போகுதாம்,''

''எல்லாம் அந்த ஆறுச்சாமிக்கே வெளிச்சம்,'' என்ற சித்ரா, ''மித்து, வாடி. அவர் வந்துட்டார்,'' என்றவாறே, நில அளவை துறை அலுவலகத்துக்குள் சென்றாள்.

சில நிமிடங்களில், சந்தேகத்தை தெளிவுபடுத்திய பின், இருவரும் கிளம்பினர். டூவீலர் பார்க்கிங் செய்த இடத்தில், போதை ஆசாமி ஒருவரை போலீஸ்காரர் நைய புடைத்துக் கொண்டிருந்தார்.

''இப்படி பகல்லயே குடிச்சுட்டு, கலாட்டா பண்றாங்க பாருங்கக்கா...''

''இன்ஜின் திருட்டு போறது தெரியாம, நிலக்கரி திருடனவரை அடிச்ச கதையா, 'சரக்கு' பாட்டில ஒரு போலீஸ் ஆபீசரே சேப்டி பண்ணி வைச்சுருக்கிற கதை உனக்கு தெரியுமா...?

''என்னக்கா… பெரிய மேட்டரா சொல்றீங்க போல,'' ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.

''சட்ட விரோதமா சரக்கு வித்தவங்க மேல கேஸ் போட்டு, அவங்ககிட்ட இருந்த சரக்கு பாட்டில போலீஸ்காரங்க பறிமுதல் செய்வாங்க. அப்படி ஸ்டோர் ரூம்ல இருந்த, 100 சரக்கு பாட்டில, ஒரு ஸ்டேஷன் ஆபிசரு, மொத்தமா அள்ளிட்டு போய், தன் வீட்ல சேப்டி பண்ணிட்டாராம்…''

''அடக்கொடுமையே… இந்த கொடுங்கூத்து எங்கீங்க்கா?''

''லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிற ஊருலதான். காலாவாதியான 'சரக்கு' கொண்டு போய், அவரு என்ன பண்ணுவாருன்னு, ஸ்டேஷனில், ஒரு பட்டிமன்றமே நடக்குதாம்டி,''வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிய போது, எதிரே வந்த ஊரக வளர்ச்சித்துறை வாகனத்தின் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது.

அதைப்பார்த்து கொண்டே, ''கொரோனாவுக்கு பின், 'கன்சல்டிங்' கட்டணத்தை அதிகப்படுத்திட்டாங்க…'' என்றாள் மித்ரா.

''டாக்டர்களை தாண்டி சொல்ற,'' என்ற சித்ரா, ''இல்லக்கா, ஊரக வளர்ச்சித்துறைய கவனிக்கிற பெரிய ஆபீசர்களை தான் சொல்றேன். மாசாமாசம், ஊராட்சியில், வரவு - செலவு கணக்க, சரி பாப்பாங்க,''

''அவங்களுக்கு செக்கரட்டரிங்க, 'கன்சல்டிங் பீஸ்' கொடுக்கலைன்னா, கேள்வி மேல கேள்வி கேட்டு, 'ரிமார்க்' எழுதிடுவாங்களாம். இதனால ஒவ்வொரு ஊராட்சி செக்கரட்டரியும், அஞ்சாயிரம் வரைக்கும், கப்பம் கட்டணும். கொரோனாவுக்கு அப்புறமா, அதைய, பத்தாயிரமா ஏத்திட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''இதையெல்லாம், பெரிய அதிகாரி கண்டிச்சா பரவாயில்லடி,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''கரெக்ட்தாங்கக்கா. கோழிப்பண்ணை ஊர்ல, நிலத்த ரியல் எஸ்டேட்டா மாத்தற வேலைய சில வி.ஏ.ஓ.,ங்க ஜரூரா செய்து தர்றாங்களாம். ஆனா, நிலத்தோட ரேட்டுக்கு சமமா கமிஷன் கேக்கறாங்களாம். கட்டுப்படியாகலைன்னா இழுத்தடிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

ரோட்டில், வாகன நெரிசல் அதிகமாக இருக்கவே, ''தீபாவளிக்கு இன்னும், பத்து நாள் இருக்குது. அதுக்குள்ள துணி, பொருட்கள் வாங்க மக்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்கன்னு நினைக்கறேன்னு,'' சொன்ன சித்ரா, வண்டியை மெதுவாக ஓட்டினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X