கல்லூரிகள் கட்டினேன் நடிகன் ஆனேன்: நடிகர் ஜோதி முருகன்

Added : நவ 03, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து போராடுவதில் பலர் இருந்தாலும், வெற்றி பெற்ற பின் வேறு துறையில் கால்பதித்து அத்துறையிலும் வெற்றியை நிலைநாட்டத் துடிப்பது ஒரு சிலர் மட்டுமே. அப்படி ஒவ்வொரு துறையாக வெற்றி பெற போராடி வருகிறார் நடிகர் ஜோதி முருகன்.அவரிடம் பேசியதிலிருந்து, எனது சொந்த ஊர் திண்டுக்கல். எம்.பில்., முடித்துள்ளேன். சிறுவயது முதலே சினிமா
கல்லூரிகள் கட்டினேன் நடிகன் ஆனேன்: நடிகர் ஜோதி முருகன்

வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து போராடுவதில் பலர் இருந்தாலும், வெற்றி பெற்ற பின் வேறு துறையில் கால்பதித்து அத்துறையிலும் வெற்றியை நிலைநாட்டத் துடிப்பது ஒரு சிலர் மட்டுமே. அப்படி ஒவ்வொரு துறையாக வெற்றி பெற போராடி வருகிறார் நடிகர் ஜோதி முருகன்.

அவரிடம் பேசியதிலிருந்து, எனது சொந்த ஊர் திண்டுக்கல். எம்.பில்., முடித்துள்ளேன். சிறுவயது முதலே சினிமா என்றால் பிடிக்கும். பண்டிகை காலங்களில் வெளியாகும் அனைத்து படங்களையும் அன்றே பார்த்து விடுவேன். அந்தளவிற்கு சினிமா மீது காதல்.எங்களது குடும்பத்தொழில் பேக்கரி. அதை முறையாக கற்றுக்கொள்ள கேட்டரிங் படித்தேன். படிப்பை முடித்தவுடன் கேட்டரிங் கல்லுாரி ஆரம்பித்தேன். கல்லுாரி ஆரம்பிக்கும் போது என்னுடைய வயது 22. அப்பொழுதே பலர் இந்த வயதில் கல்லுாரி ஆரம்பிக்கிறான், இவன் தேற மாட்டான் என என் காதுபட கேலி செய்தனர்.

பல போராட்டங்களுக்கு பிறகு குடும்பத்தினர் ஒத்துழைப்பால் வெற்றியும் கிடைத்தது. அடுத்தது நர்சிங் கல்லுாரி, பாலிடெக்னிக், பேஷன் டிசைனிங், கலை அறிவியல் கல்லுாரி என விரிவுபடுத்தினேன். திண்டுக்கல், பொள்ளாச்சி, கரூர், ஈரோடு என அடுத்தடுத்த மாவட்டங்களிலும் கல்லுாரிகளை வளர்த்து சுரபி கல்வி நிறுவனங்களாக மாறியதால் நானும் தாளாளராக மாறினேன்.அந்த சமயத்தில் ஒரு படம் ஷூட்டிங் எடுக்க எனது கல்லுாரியை சினிமா நிறுவனம் அணுகியது. அதற்கு அனுமதி வழங்கியதால் அந்த படத்தில் ஒரு கேரக்டர் நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர். நடிக்க ரொம்பவே பயந்தேன்; என்றாலும் நடித்தேன்.

அந்த படம் தான் 'ஒரு நாள் கூத்து'. தொடர்ந்து திண்டுக்கல்லில் எங்கு ஷூட்டிங் நடந்தாலும் சென்று விடுவேன். எப்படி நடிக்கிறார்கள் என்பதை பார்ப்பது தான் என் முதல் வேலை. சிறு சிறு கேரக்டர்களாக கருப்பன், கென்னடி கிளப், சத்ரியன், க/பெ ரணசிங்கம், அக்கா குருவி என 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். பத்து படங்களுக்கு மேல் வெளியான நிலையில் 20 படங்கள் வெளியிட தயாராக உள்ளன.

தற்போது 'வேட்டைநாய்' படத்தில் வில்லனாக நடித்தது மட்டுமின்றி, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நானே. படிப்படியாக வில்லன் கேரக்டர் வரை வந்து விட்டேன். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் வில்லனாக நடிப்பதே என் ஆசை. முதன்முதலில் கல்லுாரி ஆரம்பிக்கும் போது தோற்று விடுவாய் என பயமுறுத்திய கூட்டத்தின் மத்தியில், அதை கல்வி நிறுவனங்களாக மாற்றி உயர்ந்து காட்டினேன். தற்போதும் அதே கூட்டம் என் சினிமா ஆசையை பார்த்து பயமுறுத்துகிறது. இதிலும் வெற்றி பெறுவேன், என்றார்.
இவரை வாழ்த்த 98427 71331
தீப்சி

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-நவ-202006:05:10 IST Report Abuse
NicoleThomson கல்வியை விற்று கலைக்கு ஆசைப்படுறீங்க உஷாரு
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
04-நவ-202006:10:38 IST Report Abuse
N Annamalai இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசை படுகிறீர்களோ என்று அச்சப்படுகிறேன் .பணம் போடாமல் நடிக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X