கலகலப்பு 2, அடுத்த சாட்டை, எட்டுத்திக்கும் பற சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்து தற்போது ஹீரோயினாக வலம் வரும் நடிகை சினேகா அளித்த பேட்டி ....
உங்களை பற்றி...
சென்னை சேர்ந்தவள். அமெரிக்காவில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். தமிழ்வெஸ்டன், பாலிவுட் டான்ஸ்சில் பட்டையை கிளப்புவேன். மாடலிங் மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. 2018ல் 'கலகலப்பு2'வில் ஜீவாவின் தங்கையாக நடித்தேன். இயக்குனர் சுந்தர்.சி பாராட்டியது நடிப்பின் மீது ஆர்வத்தை துாண்டியது.
அடுத்த வாய்ப்புகள்...
இயக்குனர் சமுத்திரகனியை சந்தித்தவுடன் 'எட்டுத்திக்கும் பற' படத்தில் வாய்ப்பளித்தார். அவருடன் வழக்கறிஞர் கேரக்டரில் சமூக சிந்தனையுடன் நடித்ததில் பெருமையாக இருந்தது. இயக்குனர் அன்பழகனின் 'அடுத்த சாட்டை' நல்ல வரவேற்பு பெற்றது.
ஹீரோயின் எதிர்பார்ப்பா...
ஹீரோயின் வாய்ப்பு நிறைய வருகிறது. ஆனால் பல படங்கள் ரீலிஸ் ஆகாமல் போகிறது. படத்தின் டைட்டிலை தேடி போக கூடாது என கருதி நல்ல ரோலுக்காக காத்திருக்கிறேன். இயக்குனர் ஹரிஹரனின் 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். ஒருபடம் ரொமாண்டிக், மற்றொன்று திரில் படம். 'லாக்டவுன்' இல்லாவிட்டால் படம் ரிலீஸ் ஆகியிருக்கும். வெப் சீரியல்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.
அமெரிக்காவில் பிடிச்சது...
நான் நல்லா படித்தேன். படித்து முடித்ததும் அமெரிக்காவில் வேலையும் கிடைத்தது. எனது கனவை நோக்கி பயணிக்க முடிவு செய்து சினிமா பீல்டுக்கு வந்துட்டேன். வாழ்க்கையில் எனது 'பர்ஸ்ட் ரிஸ்க்' எடுத்துள்ளேன். கிளிக் ஆனால் ஓகே. அமெரிக்கா வாழ்வியல் முறையை விட இந்தியா பெஸ்ட். நமது வாழ்க்கை முறை எளிது. நம் நாட்டின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை.
எதிர்காலம்...
ஆண்டுக்கு 2 படம் நல்ல ஹீரோயினாக அமைய வேண்டும். தேவைக்கு ஏற்ப கிளாமராக நடிப்பேன். கிளாமர் இல்லாமல் ஹீரோயின் இல்லை. ரசிகர்கள் வெறுக்கும் அளவிற்கு கிளாமர் காட்ட கூடாது.
ரோல் மாடல்...
ஹீரோயின்கள் காஜல்அகர்வால், சமந்தா, ராதா பிடிக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகள்.
இவரை பாராட்ட contactsneha@gmail.com
சிவரவி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE