அரசியல் செய்தி

தமிழ்நாடு

மன்னிப்பு கேட்பார்களா ஸ்டாலின், ஹெச்.ராஜா - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : நவ 04, 2020 | Added : நவ 03, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதித்ததாக கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பா.ஜ.வின் ஹெச்.ராஜா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் இன்று(நவ., 3) டிரெண்ட் ஆகினர்.கடந்த அக்., 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நடந்தது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள்
மன்னிப்பு_கேள்_ஸ்டாலின், தேவரை_அவமதித்த_எச்ராஜா,

சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதித்ததாக கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பா.ஜ.வின் ஹெச்.ராஜா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் இன்று(நவ., 3) டிரெண்ட் ஆகினர்.

கடந்த அக்., 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நடந்தது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர். திமுக., தலைவர் ஸ்டாலின் சென்றபோது அங்கு அவரது நினைவிடத்தில் ஸ்டாலினிடம் விபூதி வழங்கினார் பூசாரி. ஆனால் அவர் அதை நெற்றியில் இடாமல் உடலில் பூசிக்கொண்டு பின் அப்படியே உதறிவிட்டு சென்றார். இதனால் தேவரை அவமதித்து விட்டதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் சில தினங்களுக்கு முன் கண்டனங்கள் எழுந்தன.


latest tamil news




இந்நிலையில் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி டுவிட்டரில் இன்று(நவ., 3) மீண்டும் அவருக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #மன்னிப்பு_கேள்_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.


latest tamil news




சர்ச்சையில் ஹெச்.ராஜா


இதேப்போன்று பா.ஜ.வின் ஹெச்.ராஜாவிற்கு எதிராகவும், #தேவரை_அவமதித்த_எச்ராஜா என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. தேவர் நினைவிடத்தில் பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் வணங்கி அஞ்சலி செலுத்தியபோது இவர் மட்டும் வணங்காமல் இருப்பதாக கூறி ஒரு போட்டோவை பதிவிட்டு, சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. இதனால் அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஓட்டுக்காக முத்துராமலிங்க தேவரை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதுபோன்ற அரசியல் செய்வார்களோ என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-202014:40:05 IST Report Abuse
தமிழவேல் இந்த இரு போட்டோக்களில் ஒரு வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். ஒரு போட்டோவில் அனைவரும் மாஸ்க் போட்டுள்ளனர் இன்னொன்றில் கிடையாது. இது போலவே திரு அண்ணாமலை அவர்களை இரண்டு மீட்டிங் களில் யாரும் மாஸ்க் அணியவில்லை. அனைவர் கண்ணிலும் படும் இந்த விஷயம், யாரும் எதனால் கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-202014:35:13 IST Report Abuse
தமிழவேல் அந்த ஆள், விபூதி அணிவதில்லை என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே ? பூசாரி கொடுத்ததை மரியாதைக்கு வாங்கிக்கொண்டு அதை கழுத்தில் பூசிக்கொண்டார். மீந்ததை கையில் பூசிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் என்ன சர்ச்சை ? கோவிலுக்கு செல்லும் போது, சிலர் நெற்றியில் பூசிக்கொள்ளும் அளவிற்கு வீணாகாமல் சிக்கனமாக இரண்டு விரலால் விபூதி குங்குமம் தருவார்கள். சந்தானம் கூட ஒரு சொட்டு அளவிற்குத்தான் கையில் வைப்பார்கள். சில கோவில்களில் அனைத்து விரல்களாலும் அள்ளி தருவதுண்டு. பாக்கியை பக்கத்தில் கிண்ணம் இருந்தால் போடுவது வழக்கம். அதனால்தான், கோவில்களில் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இல்லை என்றால், பாக்கியை என்ன வெல்லாம் செய்கின்றார்கள் என்று நீங்களே பாருங்கள். இன்னொன்று, கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் பசும்பொன் தேவர் அவர்களை அனைவரும் கடவுளாகப் பார்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
04-நவ-202014:32:23 IST Report Abuse
வல்வில் ஓரி ஆமாம் அரசு என்ன பிரசாதம் எல்லாம் கொடுக்க சொல்லிவிட்டார்களா என்ன அப்புறம் ஏன் விபூதி பிரசாதம் கொடுக்க பட்டது அப்போ இது வேண்டும் என்று செய்யப்பட்ட நாடகமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X