பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Updated : நவ 05, 2020 | Added : நவ 03, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக கவர்னர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, அதிருப்தி அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்மானம்முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப்
பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக கவர்னர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, அதிருப்தி அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தீர்மானம்



முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2018 செப்., 9ல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, கவர்னர் முடிவு அறிவிக்காத நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, பேரறிவாளன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதிருப்தி



இந்த மனு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது, கவர்னர் முடிவு அறிவிக்காமல் இருக்கிறார். இந்த நேரத்தில், அதிகார வரம்பை பயன்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனால், மாநில அரசின் பரிந்துரை, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-நவ-202007:29:49 IST Report Abuse
Cheran Perumal இவர்கள் தண்டனை கொடுப்பார்களாம், ஆனால் அதை ரத்து செய்ய வேறொருவர் வரவேண்டுமா?
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
05-நவ-202007:27:48 IST Report Abuse
Cheran Perumal கவர்னர் ஒப்புதல் கொடுத்தால் ஒரு குரூப்பும் கொடுக்காவிட்டால் ஒரு குரூப்பும் மோடியை வசைபாட கிளம்பும். அதைத்தான் கோர்ட் எதிர்பார்க்கிறதா?
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
04-நவ-202021:19:26 IST Report Abuse
Ellamman இந்த விஷயத்தில் பரட்டை என்னும் வட்டிகாந்த் நிலை என்ன??? இம்மாதிரியான முக்கிய விஷயங்களுக்கு ஒரு வாய்சும் கொடுக்கமாட்டார்... கணக்கு பட்டயக்காரன் சொன்னால் திருவாய் மலர்வாரோ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X