பொது செய்தி

இந்தியா

கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு

Updated : நவ 04, 2020 | Added : நவ 04, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருவாரூர் :அமெரிக்க துணை அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற, துளசேந்திரபுரம் அய்யனார் கோவிலில், கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா, பி.வி. கோபாலன், துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது
கமலா ஹாரிஸ் வெற்றி பெற  பூர்வீக கோவிலில் வழிபாடு

திருவாரூர் :அமெரிக்க துணை அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற, துளசேந்திரபுரம் அய்யனார் கோவிலில், கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.


latest tamil news



திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா, பி.வி. கோபாலன், துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகள் சியாமளாவின் மகள் தான், கமலா ஹாரிஸ்.இக்கிராமத்தில் உள்ள, தர்மசாஸ்தா கோவில், கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குல தெய்வ கோவில். இக்கோவிலில், அய்யனார் மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. துணை அதிபர் பதவிக்கு, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர், தேர்தலில் வெற்றி பெற, தர்ம சாஸ்தா கோவிலில், கிராம மக்கள் சார்பில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.கமலா ஹாரிஸ், தனக்கு பிடித்த உணவு எனக் கூறிய, இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், ஊர் முழுதும், கமலாவை வாழ்த்தி, பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-நவ-202019:04:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கிறித்துவ அம்மாவிற்கு இந்து கோவிலில் பூஜையா
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-நவ-202018:30:32 IST Report Abuse
Rasheel இந்த படித்த பெண்கள் அமெரிக்கா சென்று ஏதோவொரு வெள்ளை காரனையோ அல்லது கருபரையோ திருமணம் செய்கிறார்கள். இந்தியா பெண்களின் மேல் உள்ள ஈர்ப்பால் இரண்டு மூன்று வருடம் குடும்பம் நடத்தி சில குழந்தைகளை கொடுத்து விட்டு சிலர் சொத்துக்களை ஏமாற்றி வாங்கி ட்வோர்ஸ் செய்து விடுகிறார்கள். அதற்கு பின்னல் அப்படி இப்படி வாழ்க்கை. இதுதான் சில இந்தியர்களின் வாழ்கை. இதை தவிர இந்தியாவிற்கும் இவர்களுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. அப்பாவி தமிழக கிராமத்து மக்கள். பாவம்.
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
04-நவ-202017:22:04 IST Report Abuse
ANTONYRAJ இந்த கமலாஹாரிஸ்தான் நம் பிரதமர் மோடி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பாகிஸ்தானை விட முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தவள்.இவள் எப்பவுமே இந்தியாவிற்கு எதிரிதான்.இவளும் படியும் ஜெயிப்பது இந்தியாவுக்கு நன்மை பயக்காது.அதுவும் போக இவளும் இவளோட அம்மாவும் ஆப்ரிக்க கிறிஸ்தவரை மணந்தவர்கள்.இப்படி பட்டவர்கள் இந்தியாவை எப்படி நேசிப்பார்கள்? இந்திய அப்பாவிற்கும் இத்தாலி தாயுமான சோனியாவிற்கு பிறந்த ராகுல்காந்தியே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாத போது இவளை மட்டும் நாம் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X