இந்த செய்தியை கேட்க
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில், பிரதிநிதிகள் அவைத் தேர்தலில் 4 அமெரிக்க வாழ் இந்தியர்கள் வெற்றிப்பெற்று எம்பி.,யானார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி தரப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாய கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில், 4 அமெரிக்க வாழ் இந்தியர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். பிரதிநிதிகள் அவைத் தேர்தலில் செனட் உறுப்பினர்களாக, ஜனநாயக கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, பிரமிளா ஜெயபால் மற்றும் ரோகண்ணா ஆகியோர் வெற்றிப்பெற்று எம்.பி.,யானார்கள்.
திருநங்கை எம்.பி.,யாக தேர்வு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் சாரா மெக்ப்ரைட் வெற்றிப்பெற்று எம்.பி.,யாக தேர்வாகியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE