அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர் விரோதியா திமுக?: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : நவ 05, 2020 | Added : நவ 04, 2020 | கருத்துகள் (108)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., ஆட்சியின்போது தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்பட்டதாக குறிப்பிட்டு டுவிட்டரில் #தமிழர்_துரோகி_திமுக என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.தமிழகத்தில் கடந்த பாதி நூற்றாண்டுகளாக திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளே ஆட்சியில் அமர்ந்துள்ளன. மற்ற கட்சிகள் எவ்வளவு தான் முற்பட்டாலும், இந்த இருபெரும் கட்சியை தாண்டி ஆட்சி அரியணையில்
#தமிழர்_துரோகி_திமுக,டுவிட்டர், டிரெண்டிங்

சென்னை: தி.மு.க., ஆட்சியின்போது தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்பட்டதாக குறிப்பிட்டு டுவிட்டரில் #தமிழர்_துரோகி_திமுக என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த பாதி நூற்றாண்டுகளாக திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளே ஆட்சியில் அமர்ந்துள்ளன. மற்ற கட்சிகள் எவ்வளவு தான் முற்பட்டாலும், இந்த இருபெரும் கட்சியை தாண்டி ஆட்சி அரியணையில் அமரமுடிவதில்லை. அந்த அளவிற்கு அரசியலில் இருபெரும் துருவங்களாக உள்ள இந்த கட்சிகள், அவர்களுடைய ஆட்சியில் நடந்த சாதனைகளை விளக்கியும், சம்பவங்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை குறிப்பிட்டு விமர்சனத்தை முன்வைத்தும் அரசியல் செய்து வருகின்றனர். மக்கள் நலனுக்காகவே திட்டங்களும், நடவடிக்கைகளும் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்திற்காக இருந்தால், எதிர் தரப்பினர் விமர்சிப்பது அரசியலில் இயல்பானதே.


latest tamil news


அப்படி இருக்கையில், திமுக ஆட்சி காலத்தில் நடந்த சில விஷயங்கள் இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மின்வெட்டு, காவிரி நீர் பங்கீடு, ஈழ தமிழர் படுகொலை, கச்சத்தீவு மீனவர் பிரச்னை, மீத்தேன் திட்டம் ஆகியவற்றை அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவை அனைத்தும் தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பலதரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ஆனால், திமுக., தரப்பும் இதற்கு விளக்கங்கள் கொடுத்தாலும், அதிமுக.,வினர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நெட்டிசன்களும் இவற்றையெல்லாம் குறிப்பிட்டு டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news


தமிழர்களுக்கு திமுக., விரோதியாக இருப்பதாக குறிப்பிட்ட ஒருவர், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேசியிருந்த செய்தியுடன் கூடிய நாளேடை பகிர்ந்துள்ளார்.

இன்னும் சிலர், திமுக ஆட்சி காலத்தில் 15 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு தொடர்ந்ததை குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர், 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தொழில் வளத்தை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிய திமுக., தற்போது தமிழகத்தை மீட்போம் என கூறலாமா,' எனவும் பதிவிட்டுள்ளார்.

இப்படியாக, திமுக., ஆட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வெளிப்படுத்தி #தமிழர்_துரோகி_திமுக என்னும் ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
11-நவ-202008:18:46 IST Report Abuse
madhavan rajan தமிழ்நாட்டில் தனியார் ஆங்கில பள்ளிகள் அதிகமானது யாருடைய ஆட்சியில்? அதன் முதலாளிகளின் பலர் எந்த கட்சி? இதிலிருந்தே தெரியவில்லையா திமுக தமிழ் துரோகி என்று.
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
08-நவ-202009:14:36 IST Report Abuse
Sathya Dhara சுடலை அவர்களே....இதில் சந்தேகம் என்ன.....தமிழ் காட்டுமிராண்டி மொழி....என்று கேலி பேசிய.....திருக்குறளை கண்டபடி விமர்சனம் செய்த ஈ.வே.ரா சிலைகளை தெருத்தெருவாக ..அரசங்கபணத்தில் வைத்து....இந்த மண்ணின் பெருமைதனை கிண்டல் செய்த கன்னட வழி வந்த துரோகியை ....என்று வரை நீ தொடர்ந்து வழி படுகிறாயோ அன்று வரை தமிழ் துரோகிதான்....தமிழர்களின் எதிரிதான்.....சும்மா சும்மா தமிழ் என்று.....நீ தமிழர்களின் காதில் பூ சுற்றவில்லை..ஊட்டி மலர்க்கண்காட்சியையே தமிழர்களின் காதினுள் ஏற்றுகிறாய். தமிழர்கள் இனி ஏமாற மாட்டார்கள். உங்களின் பொய் முகங்களையும் வஞ்சக நெஞ்சங்களையும் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்... இனி ஒரே தாரக மந்திரம்தான். சுடலை வேண்டாம் போடா....திமுக வேண்டாம் போடா.....இது எப்படி இருக்கு.....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
11-நவ-202008:21:47 IST Report Abuse
madhavan rajanதமிழுக்கு அதிக தொண்டாற்றிய திருவிக, வவேசு, பாரதியார், கம்பர், சேக்கிழார், மறைமலை அடிகளார், மற்றும் பலர் இருக்க தமிழை அவமதித்த பெரியாரை கடவுளாக வணங்கும் பகுத்தறிவு திருட்டுக்கூட்டம் திமுக என்பதில் சந்தேகம் உண்டா?...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-நவ-202020:54:31 IST Report Abuse
konanki தோல்விக்கு தமில் வெகமா பட்க வாராதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X