பள்ளிகள் திறப்பு; நவ.,9ல் கருத்துக் கேட்பு கூட்டம்

Added : நவ 04, 2020 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து நவ.,9ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவ.,16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில்
பள்ளிகள்_திறப்பு, கருத்து_கேட்பு_கூட்டம், தமிழகஅரசு, நவம்பர்9

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து நவ.,9ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவ.,16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. இதனையடுத்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil newsஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாக மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக்கொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக நவ.,16 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக நவ.,9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.


latest tamil newsஇந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan -  ( Posted via: Dinamalar Android App )
04-நவ-202020:18:04 IST Report Abuse
Ganesan school open panna venam ellarum padichu arivali akituvanga
Rate this:
Cancel
04-நவ-202018:52:27 IST Report Abuse
kulandhai Kannan பள்ளித் திறப்பு வேண்டாம் என்று கூறும் பெற்றோர், தம் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்கிறார்களா??
Rate this:
Cancel
Anand Radhakrishnan - CHENNAI,இந்தியா
04-நவ-202018:46:15 IST Report Abuse
Anand Radhakrishnan for the covid 19 is a pandemic disease and so far no vacation released, now corana 2nd wave started in world countries. In Indian population definitely no one is followed the safety rules. Schools will continue the on line classes.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X