கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலங்களை 'கபளீகரம்'செய்வோருக்கு 'கிடுக்கி!'

Updated : நவ 04, 2020 | Added : நவ 04, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை :கோயில் நிலங்களை அபகரித்து 'கபளீகரம்' செய்வோருக்கு 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில் சென்னைஉயர்நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 'கோயில் நலன்களுக்கு எதிராக அதன் நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது; வேறு பயன்பாடுகளுக்கு எடுக்கக் கூடாது' என கண்டித்துள்ளஉயர்நீதிமன்றம் 'உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும்' என
கோவில் நிலங்களை 'கபளீகரம்'  செய்வோருக்கு   'கிடுக்கி!'

சென்னை :கோயில் நிலங்களை அபகரித்து 'கபளீகரம்' செய்வோருக்கு 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில் சென்னைஉயர்நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 'கோயில் நலன்களுக்கு எதிராக அதன் நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது; வேறு பயன்பாடுகளுக்கு எடுக்கக் கூடாது' என கண்டித்துள்ளஉயர்நீதிமன்றம் 'உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் சக்தி முத்தம்மன் கோயில் உள்ளது. கோயில் வசம் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் 5 சென்ட் நிலத்தில் மீன்வளத் துறை கட்டடங்கள் கட்டியது. மேலும் மீன் சந்தை, மீன் உணவகம் அமைப்பதற்காக சுற்றுச்சுவர் கட்டவும் மீன்வளத்துறை முயற்சித்தது.இதையடுத்து கோயில் நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை கோரி கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலுாரிலுள்ள கோட்டை மாரியம்மன் கோயில் அனுபவத்தில் 80 ஆண்டுகளாக உள்ள நிலத்துக்கு பட்டா வழங்கவும் அறநிலையத் துறைக்கு தெரியாமல் மண்டல போக்குவரத்து அலுவலகம் அமைக்க நிலத்தை மாற்றியதற்கு தடை விதிக்கவும் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இரண்டு வகையான மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: நீலாங்கரையில் கோயில் வசம் இருந்த நிலத்தை மீன்வளத் துறைக்கு அரசு மாற்றியது முறையற்றது. அறநிலையத்துறை, மீன் வளத்துறை இரண்டும் அரசு துறைகளாக இருப்பதால் அறநிலையத் துறையிடம் குத்தகை ஒப்பந்தத்தை மூன்று மாதங்களில் மீன்வளத்துறை மேற்கொள்ள வேண்டும்.நியாயமான வாடகையை அறநிலையத்துறை நிர்ணயிக்க வேண்டும். வாடகை செலுத்தி மீன்வளத்துறை தொடர்ந்து இயங்கலாம். ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பவில்லை என்றால் அறநிலையத்துறை வசம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்.மீதி உள்ள காலியிடத்தை அறநிலையத்துறை வசம் எடுத்து ஆறு மாதங்களில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். கோயில் மேம்பாட்டுக்காக மட்டுமே இடத்தை பயன்படுத்த வேண்டும். யாராவது ஆக்கிரமித்திருந்தால் சட்டப்படி அவர்களை அகற்ற வேண்டும்.


ஓமலுார்சேலம் மாவட்டம் ஓமலுாரிலுள்ள நிலத்தைப் பொறுத்தவரை கோட்டை மாரியம்மன் கோயில் வசம் நிலம் இருக்கவும் அனுபவ உரிமையும் உள்ளது.எனவே வருவாய் ஆவணங்களில் கோயில் பெயரை குறிப்பிட்டு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குஉரிய காலியிடத்தை எட்டு வாரங்களில் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

சர்ச்சைக்குஉரிய நிலங்களை வைத்திருக்கவும் அனுபவிக்கவும் கோயிலுக்கு உரிமை உள்ளது. இந்த நிலத்தில்அறங்காவலர்கள் தனிப்பட்ட நபர்கள் உரிமை கோர முடியாது.சர்ச்சைக்குரிய நிலத்தின்உரிமை அரசிடம் உள்ளது.அந்த நிலத்தை கோயில் நலன்கள் அல்லாமல் வேறு பயன்பாட்டுக்கோ, இடமாற்றம் செய்யவோ, விற்கவோ கூடாது.ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 'மத நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாக்கும் கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது; ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்கும் வகையில் அரசு அறங்காவலர்கள், பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என கருத்து தெரிவித்துள்ளது.இந்த வழக்கைப் பொறுத்தவரை கோயில்கள் வசம் உள்ள நிலங்கள் முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அரசின் மற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.


யார் பாதுகாவலர்கோயில் சொத்துக்களுக்கு அறநிலையத் துறை தான் பாதுகாவலர். இருந்தும் கோயில் நலன்களை பாதுகாக்க அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை ஏற்க முடியாது.தமிழகத்தில் உள்ள கோயில்கள் நம் பழமை வாய்ந்த கலாசாரத்தின் அடையாளம் மட்டுமின்றிநம் பெருமைக்கும் கலை,அறிவியல், சிற்பக்கலையில் புலமை பெற்றிருப்பதற்கும் ஆதாரமாக திகழ்கின்றன.எனவே மத நிறுவனங்களின் சொத்துக்களை குறிப்பாக கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயை கோயில் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும்.
அதனால் இந்த கோயில்களின் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி மீட்டு பராமரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறைஆணையர் எடுக்க வேண்டும்.கடமை தவறும் அதிகாரிகள் கோயில் நலன்களுக்கு எதிராக சட்டவிரோதமாக நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது. நிலங்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து சட்டப்படி நிர்வகிக்க வேண்டும்.கோயில்களின் நிதி விஷயங்கள், சொத்துக்கள்தொடர்பாக முறையானபதிவேட்டை பராமரிக்க வேண்டும். கடமை தவறும் அதிகாரிகளுக்கு எதிராக துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.கோயில்கள் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் காணாமல் போன விஷயத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோயில்கள் சொத்துக்களை பாதுகாக்க, பராமரிக்க அறநிலையத்துறைக்கு தேவையான உதவியை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புகைப்படங்களை அனுப்புங்கள்!மோசமான நிலையில் உள்ள, கோவில்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: மிகவும் மோசமான நிலையில் உள்ள கோவில்களின் புகைப்படங்களை, எனக்கு, 'SaveTemples@OurTemplesOurPrideOurRight.in' என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கோவிலின் நான்கு பக்கங்களிலிருந்தும், முடிந்தால் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்; கோவில் எத்தனை ஆண்டுகள் பழமையானது; எந்த பெருமானுடைய கோவில்; எத்தனை விக்ரஹங்கள் உள்ளன; அந்த கோவில் செயல் அலுவலர் யார்; இன்னும் தகவல்கள் ஏதேனும் இருப்பின் அனுப்பி வைத்தால், வரும், 18ம் தேதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.இவ்வாறு, ரங்கராஜன் நரசிம்மன் கூறியுள்ளார்.


'சொத்துக்கள் பாதுகாக்கப்படும்!'''உயர்நீதிமன்ற தீர்ப்பு, கோவில் சொத்துக்கள்; கோவில் வருமானத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்,'' என, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறினார்.

இதுகுறித்த, அவர் கூறியதாவது:
ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின், 23வது பிரிவில், கோவில் சொத்துக்கள், வருவாய் நிர்வாகத்தில், கமிஷனரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவிலுக்கு என்ன நோக்கத்துக்காக சொத்துக்கள் கொடுக்கப்பட்டதோ, அந்த பொது நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த அடிப்படை நோக்கத்துக்கு மாறாக, வேறு பொது திட்டங்களுக்கு கோவில் சொத்துக்களையும், வருவாயையும் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.சட்டப்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த தீர்ப்பு வழிவகுக்கும். இதனால், கோவில் சொத்துக்களும், வருமானமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு, டி.ஆர்.ரமேஷ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
05-நவ-202022:49:17 IST Report Abuse
Marai Nayagan இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை ஆக்க பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதற்க்கு முதலில் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பாழடைந்த கோயில் பற்றிய விவரங்களை உடனடியாக 'SaveTemples@OurTemplesOurPrideOurRight.in' என்ற ஈமெயில் செய்யவும். இதுவே திருட்டு திராவிட கூட்டத்திடம் இருந்து கோவிலை பாதுகாக்க உதவும்.
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு இந்த கோயில் நிர்வாகத்துல இந்து பெயர்ல இருக்குற மதம் மாறிகளை கொஞ்சம் கண் காணிக்கனும் , கோவில் சுத்தி அந்நிய மத ஆட்களை கடை வைக்க விடக் கூடாது.
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
05-நவ-202020:05:18 IST Report Abuse
SENTHIL கடவுளர்களை வஞ்சித்த அரக்கர்களையும் அவர்தம் ராஜ்ஜியங்களையும் சற்று மனதில் நினைத்தால் உங்கள் மனது நல்வழிப்படும். இல்லை உங்கள் வாரிசுகளில் யாரேனும் ஏன் நீங்களே கூட மறுபிறவி எடுத்து அந்த பாவங்களுக்கு அனுபவிக்க வேண்டி வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X