திருப்பூர்: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின்விடுதலை குறித்து பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என முதல்வர் பழனிசாமி கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பும மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் கூறி இருப்பதாவது: அவிநாசி அத்திக்கடவு திட்டம் முழுக்க முழுக்க மாநில நிதியிலேயே செயல்பட்டு வருகிறது. 7 பேரின் விடுதலை குறித்து பேச தி.முகவிற்கு தகுதி எந்தவித தகுதியும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் திமுகவின் வேடம் கலைந்து விட்டது.
தி.மு.க., ஆட்சி காலத்தில் பேரறவாளனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் தான் பரோல் வழங்கப்பட்டது.

உயர் மின்கோபுரம் அமைப்பதில் மாற்று திட்டம் இல்லை. வேறு மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். பூரண மது விலக்கு என்ற அடிப்படையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE