வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.-49 ராக்கெட்

Updated : நவ 07, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (6)
Advertisement
ஸ்ரீஹரிகோட்டா: 10 செயற்கைகோள்களுடன், பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் இன்று (நவ.,11) மாலை 3:12 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்து செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01(EOS-01)( புவி ஆய்வு செயற்கைகோள்) மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் இன்று மாலை 3.12 மணிக்கு
pslvc49, rocket, eos01, sattelite,

ஸ்ரீஹரிகோட்டா: 10 செயற்கைகோள்களுடன், பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் இன்று (நவ.,11) மாலை 3:12 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்து செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


latest tamil news



இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01(EOS-01)( புவி ஆய்வு செயற்கைகோள்) மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் இன்று மாலை 3.12 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி -சி49 ராக்கெட் செலுத்தப்பட்டது .
இதற்கான கவுண்ட் டவுன் நேற்று பகல் 1 : 00 மணிக்கு துவங்கியது. லிதுவேனியா நாட்டை சேர்ந்த ஒரு செயற்கைகோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா 4 செயற்கைகோள்கள், இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டது.


latest tamil news



இன்று பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளே, இந்த ஆண்டில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் ஆகும். அதிலுள்ள சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும் என இஸ்ரோ கூறியுள்ளது.
விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும் இந்த செயற்கைகோள் உதவும் எனவும் தெரிவித்துள்ளது. 44.4 மீ., உயரம் கொண்ட பிஎஸ்எல்வி சி-49 ராக்கெடானது. இஸ்ரோவின் 51வது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும்.


latest tamil news






தீபாவளிக்கு முன்பாக ராக்கெட்


ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது: பி.எஸ்.எல்.வி.சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல் செயற்கைகோளாக இந்தியாவின் இ.ஓ.எஸ்.01 புவி கண்காணிப்பு செயற்கைகோள் பிரிந்தது. இதனை தொடர்ந்து, அனைத்து செயற்கைகோள்களும் ஒவ்வொன்றாக ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தன. தொடர்ந்து அனைத்து செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பாகவே, ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளோம்.

கொரோனா காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளை கொண்டு ராக்கெட்களை வடிவமைத்தோம். ராக்கெட் ஏவுதலில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளையும், எஸ்எஸ்எல்வி, இஓஎஸ்-02 செயற்கைகோளையும் வருங்காலத்தில் ஏவ உள்ளோம். வருங்காலத்தில் ஜிஎஸ்எல்வி எப்10 ராக்கெட், இஓஎஸ்-03 செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு


பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி, இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கும் இந்திய விண்வெளி துறைக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். கொரோனா காலத்தில், நமது விஞ்ஞானிகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனை சாதிக்க பல்வேறு தடைகளை தாண்டி வந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் லக்சம்பெர்க்கின் தலா நான்கு, லிதுவேனியாவின் ஒன்று என 9 செயற்கைகோள்கள், விண்ணில் செலுத்தப்பட்டது.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202005:37:08 IST Report Abuse
ravi chandran வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌ஜி
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,சிங்கப்பூர்
07-நவ-202022:48:14 IST Report Abuse
Abdul Rahman பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
07-நவ-202020:45:29 IST Report Abuse
Nagarajan D இஸ்ரோ சாதனைகள் தொடரட்டும்... இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X