அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க திட்டமிடும் ஜோ பிடன்

Updated : நவ 07, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
அமெரிக்காவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது. 264 தொகுதிகளில் ஜோ பிடன் முன்னணி வகிக்கிறார். அவர் வெற்றி பெற இன்னும் 7 தொகுதிகளை பெற்றாலே போதுமானது. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் தாங்கள் பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் என்னென்ன செயல்களை முதல் செய்யவேண்டுமென திட்டமிடத்

அமெரிக்காவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது. 264 தொகுதிகளில் ஜோ பிடன் முன்னணி வகிக்கிறார். அவர் வெற்றி பெற இன்னும் 7 தொகுதிகளை பெற்றாலே போதுமானது.



latest tamil news



இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் தாங்கள் பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் என்னென்ன செயல்களை முதல் செய்யவேண்டுமென திட்டமிடத் துவங்கிவிட்டனர்.

அமெரிக்கா முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய கொரோனாவைத் தடுக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்ட அவர்கள், 2020-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை சரிக்கட்ட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆக வாய்ப்புள்ளதால் வேலை வாய்ப்பினை அதிகரித்து பொருளாதாரத்தை சீர் செய்ய ஜனநாயகக் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை மீட்க முடியாது என்ற போதிலும் மேலும் பல உயிரிழப்புகளை எங்களால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார் 77 வயதான ஜோ பிடன்.


latest tamil news



இவரது வெற்றி காரணமாக அமெரிக்காவில் வாழும் சிறுபான்மையினர் மற்றும் கருப்பின மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்களும் அடக்கம். இதற்கு சமீபத்திய உதாரணமாக வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியானது. அதில் கறுப்பினப் பெண்மணி ஒருவர் ஜோ பிடனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிறகு 'அந்த முட்டாளை விரைவில் வெளியேற்றி இருக்கையில் அமருங்கள்' என தெரிவித்துச் சென்றார். இது நகைப்புக்கு உள்ளானது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 2 கோடிபேர் வேலையின்மையால் அவதியுற்று வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் ஒரு நாளில் இரண்டு லட்சம் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர் எனவும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
'கடந்த 244 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி எந்தவித மாற்றம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோ அந்த மாற்றம் மீண்டும் நடைபெறும். ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும். உங்களது வாக்குகள் விரைவில் பலன் பெறும். எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து இதனை நடத்திக் காட்டுவேன். அமெரிக்காவின் ஒற்றுமை காக்கப்படும். எதிர்க் கருத்தை வரவேற்பது தான் ஜனநாயகக் கொள்கை.
போராட்டங்கள் மற்றும் எதிர் கருத்துகளை நாங்கள் எப்போதுமே வரவேற்கிறோம். அதில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எனக்கு எதிராக வாக்களித்தவர்களையும் காக்க வேண்டியது என்னுடைய கடமை. அதை நான் நன்றாக செய்வேன்' என்றுள்ளார் பிடன்.
அமெரிக்க மத்திய வங்கி கடும் நஷ்டத்தில் உள்ளது என அதன் நிர்வாகி ஜெரோம் போவெல் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தாலே ஒழிய அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமான விஷயம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202011:08:24 IST Report Abuse
ஆப்பு தேர்தலுக்கு முன்னாடியே பைடன் ஆளுங்க 2.2 டிரில்லியன் டாலருக்கு ஊக்கத்தொகை குடுக்கணும்னாங்க. ட்ரம்ப் ஆளுங்க 1.5 டிரில்லியந்தான் குடுக்க முடியும்னாங்க. இது அப்படியே இழுபறியில் நின்னுது. இப்போ பைடன் ஜெயிச்சு வந்துட்டதால 2.2 என்ன 2.5 டிரில்லியன் அளவுக்கு ஊக்க தொகை குடுக்கப் போறாரு. அதுல கொஞ்சம் மக்களுக்கும், பெருந்தொகை பேங்குகள் மூலம் கார்ப்பரேட்களுக்கும் போயிரும். ஓபாமா வழியில் இவரும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-நவ-202006:32:10 IST Report Abuse
 Muruga Vel நம்ம கருத்து போடற பார்ட்டிங்க அதி மேதாவிகள் ..
Rate this:
Raman - kottambatti,இந்தியா
08-நவ-202007:04:42 IST Report Abuse
Ramanவிடு விடு...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-நவ-202002:45:19 IST Report Abuse
தமிழவேல் இன்று இதே சமயத்தில் ட்ரம்ப் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அவர் உண்மையிலேயே கோல்ப் விளையாடிக் கொண்டு இருந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X