சவால்களை சந்திக்க தயாராகுங்கள் விமானப் படை தலைமை தளபதி பேச்சு

Updated : நவ 09, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement
புனே:“பல திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் பாதுகாப்புப் படையினர், தயாராக இருக்க வேண்டும்,” என, விமானப் படை தலைமை தளபதி பதுாரியா கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில், பயிற்சி நிறைவு விழா, நேற்று நடந்தது. இதில், விமானப் படை தலைமை தளபதி ராகேஷ் குமார் சிங் பதுாரியா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயிற்சி முடித்த இளம்
சவால்களை சந்திக்க தயாராகுங்கள் விமானப் படை தலைமை தளபதி பேச்சு

புனே:“பல திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் பாதுகாப்புப் படையினர், தயாராக இருக்க வேண்டும்,” என, விமானப் படை தலைமை தளபதி பதுாரியா கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில், பயிற்சி நிறைவு விழா, நேற்று நடந்தது. இதில், விமானப் படை தலைமை தளபதி ராகேஷ் குமார் சிங் பதுாரியா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளிடையே, பதுாரியா பேசியதாவது:

இந்த ராணுவ அகாடமி, தலைமைத்துவத்திற்கான மையம் மட்டும் அல்ல; கூட்டுத் திறனை வலுப்படுத்தும் மையமும் கூட. இப்போது இருக்கும் போர்க்களங்கள் மிகவும் சிக்கலானவை; கணிக்க முடியாத காட்சிகள் அரங்கேறும் வகையில் உள்ளன. அத்தகை போர்க்களங்களில், ஒருங் கிணைந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் சக படைப் பிரிவு தோழர்களுடன், நீங்கள் உருவாக்கும் நட்பு பிணைப்பை, உங்கள் வாழ்க்கை முழுதும் தொடரவேண்டும். அது, உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உலகெங்கும் நிலவும் புவிசார் அரசியல் குழப்பங்கள், நம் நாட்டின் பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை, இளம் அதிகாரிகளாகிய நீங்கள் உணர வேண்டும். பல திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கவேண்டும். சிறந்த அறிவாற்றல், அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தலைமைத்துவம் போன்ற குணங்களை அனைத்து நேரங்களிலும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதையே, நம் நாடு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது.

நாட்டில், முப்படைத் தலைமை தளபதி நியமிக்கப்பட்டதும், ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டதும், பாதுகாப்பு சீர்திருத்தங்களின் வரலாற்று சிறப்புமிக்க துவக்கம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202008:39:39 IST Report Abuse
ஆப்பு நேத்துதான் இதையே முப்படைத்தளபதி பேசுனாரு... முந்தா நாள் ராஜ்நாத் ஜி பேசுனாரு... அதுக்கு முன்னாடி நரவானே ஐயா பேசுனாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X