மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

Updated : நவ 09, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி : ''இளைஞர்களுக்கு எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பை, நாம் தற்போது அளித்து வருகிறோம்; இதை பயன்படுத்தி, தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில், இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.டில்லி, ஐ.ஐ.டி.,யின், 51ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்'
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி...அழைப்பு!

புதுடில்லி : ''இளைஞர்களுக்கு எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பை, நாம் தற்போது அளித்து வருகிறோம்; இதை பயன்படுத்தி, தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில், இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.டில்லி, ஐ.ஐ.டி.,யின், 51ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த சூழலில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா பெருந்தொற்று, நமக்கு நிறைய பாடத்தை கற்று கொடுத்து உள்ளது.


சுயசார்புஉலகமயமாக்கல் அவசியம் தான் என்றாலும், சுயசார்பும் அதே அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளது. தன்னிறைவு இந்தியா இயக்கம், நம் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு களை ஏற்படுத்தி தருவதுடன், அவர்களது கண்டுபிடிப்புகளை உலகிற்கு எளிதாக காட்டவும் உதவுகிறது.இளைஞர்களுக்கு எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பை, நம் நாடு, இப்போது வழங்கி வருகிறது.
இதை பயன்படுத்தி, தங்களின் புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் வாயிலாக, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில், இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்த முடியும்.ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு, இளைஞர்களுக்கு உள்ளது. இளைஞர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளில், தயாரிப்புகளில், பணிகளில், சிறிதும் அலட்சியம் காட்டக் கூடாது; தரத்தில் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் அளிக்க கூடாது.கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்பம் வாயிலாக சிறந்த நிர்வாகம் அளிக்கப்பட்டு வருவதை, நாடு பார்த்து வருகிறது.


புதிய உயரம்இதனால், அரசின் நல திட்டங்கள், ஏழைகளை நேரடியாக சென்றடைய துவங்கியுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் குறைக்கப்பட்டுள்ளன. நம் காலத்தில், கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதே என்ற வருத்தம், நம்மில் பலரிடம் உள்ளது. ஆனாலும், இந்த சூழ்நிலையில், புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த, நமக்கு தான் முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது; இதை நினைத்து, மகிழ்ச்சி அடைய வேண்டும்.


நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், இந்த தொற்று காலத்தில், புதிய கண்டுபிடிப்புகள் தோன்றி வருகின்றன; இது, சுயசார்பு இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் பேசுகையில், ''பட்டம் வாங்கிவிட்டால், படிப்பு முடிந்துவிட்டது என, அர்த்தமல்ல. வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவதற்கான அடித்தளம் தான் இது,'' என்றார்.


வரலாற்று சிறப்பு'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி நேற்று பதிவிட்டிருந்ததாவது:ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்தது. ராணுவத்தில், 'ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டை பாதுகாக்கும் நம் வீரர்களின் நலனுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 20.6 லட்சத்துக்கும் அதிகமான, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலன் அடைந்துஉள்ளனர்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ktkswami - delhi,இந்தியா
08-நவ-202021:38:23 IST Report Abuse
ktkswami Neenga thaan maaranum. Maarinaal ella maatramum naatirkku kidaikkum
Rate this:
Cancel
08-நவ-202017:57:55 IST Report Abuse
ஆப்பு வெங்காய விலைக்கு ஏறியதால் இறக்குமதி பண்ணியாச்சு. தக்காளி கிலோ 1 ரூவாய்க்கு கொள் முதல் ஆகுதாம். தக்காளி மசோதா போட்டு அவிங்க வருமானத்தை ரெட்டிப்பாக்குங்க.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-நவ-202019:15:31 IST Report Abuse
கொக்கி குமாரு வட மாநிலங்களில் மழை அதிகம் பெய்தால் வெங்காய உற்பத்தி குறைந்து விலை ஏறும். தென் மாநிலங்களில் மழை அதிகம் பெய்தால் தக்காளி உற்பத்தி கூடி விலை குறையும். இதனை திரும்ப திரும்ப இருபதுமுறை படித்து பார்க்கவும். அப்புவிற்கு சாரி, ஆப்புவிற்கு அப்போதாவது ஏதேனும் புரிகிறதா என்று பார்ப்போம். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து தங்கள் வீட்டில் தோசை ஒழுங்காக முறுகலாக வரவில்லையென்றாலும் மோடியை குறை சொல்வீர்கள் போல....
Rate this:
08-நவ-202019:54:23 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்சரக்கடிச்சுப்புட்டு போதை வரலேன்னா கூட மோடியை குறை சொல்லுவான்...
Rate this:
08-நவ-202020:59:59 IST Report Abuse
ஸ்டாலின் ::உன்நிலை பற்றி இங்கு ஏன் பேசுற , ஏதாவது நல்லது என்றால் மோடி , அனால் ஏதாவது என்றா 56 "" இன்ச் ஒளிஞ்சிடுவார்...
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
08-நவ-202016:09:17 IST Report Abuse
தமிழன் அவுத்து விடுங்க மூடி அய்யா . எதிர்த்து கேள்வி யாரும் கேக்க வாய்ப்பு கொடுக்காதீங்க.. நீங்க மட்டும்தானே பேசுறீங்க என்ன வேணா சொல்லலாம் . சொல்லுங்க சொல்லுங்க வடக்கத்தியான் நம்புவான் .நாங்க எப்போ உங்கள நம்பினோம்
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-நவ-202018:34:30 IST Report Abuse
கொக்கி குமாரு வட இந்தியன் தமிழ்நாட்டுக்கு வந்து பக்கோடா விற்று பிழைப்பை ஓட்டுகிறான். தமிழன்(கள்) பல பேர் சவூதி அரேபியா சென்று ஒட்டகம் மேய்த்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். அதனை பற்றி தங்கள் கருத்து என்ன?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X