அமெரிக்காவில் நிர்வாகம் மாறுவதால் நம் நட்புறவு இனி என்ன ஆகும்?

Updated : நவ 09, 2020 | Added : நவ 07, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடருவதற்கு சாதகமான அம்சங்கள் நிறைய உள்ளன. புதிய நிர்வாகத்துடன் நட்புறவை வலுப்படுத்த, இந்திய துாதரகம் மூலமாக பேச்சுகளை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவக்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான நெருக்கமான நட்பை, உலகம்
 அமெரிக்காவுடனான நம் நட்புறவு இனி...

புதுடில்லி : அமெரிக்காவில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடருவதற்கு சாதகமான அம்சங்கள் நிறைய உள்ளன. புதிய நிர்வாகத்துடன் நட்புறவை வலுப்படுத்த, இந்திய துாதரகம் மூலமாக பேச்சுகளை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவக்கியுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான நெருக்கமான நட்பை, உலகம் அறியும்.காஷ்மீர் விவகாரம், சீனாவுடனான எல்லைப் பிரச்னை என, பல விவகாரங்களில், இந்தியாவுக்கு சாதகமாகவே, அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில், இரு நாடுகளும், நான்கு ஆண்டுகளில் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.


பரபரப்புஇந்நிலையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலால், அமெரிக்காவில் ஆட்சி நிர்வாகம், குடியரசு கட்சியில் இருந்து ஜனநாயகக் கட்சிக்கு மாறுகிறது. ஜனநாயகக் கட்சியின், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், அந்த நாட்டின் அதிபராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது. அதேபோல், ஆப்ரிக்கா - இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.அமெரிக்காவில் ஆட்சி நிர்வாகம் மாறும் நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது; இது பற்றி நாடு முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஜோ பிடன் - கமலா ஹாரிஸ் நிர்வாகமும், இந்தியாவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

புதிய நிர்வாகம், இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதற்கான அடித்தளத்தை, பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்கனவே அமைத்துள்ளது.இது குறித்து, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:அமெரிக்காவுடனான உறவைப் பொறுத்தவரை, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளை சமமாக மதிப்பதே நம் கொள்கை.


விமர்சனம்ஹூஸ்டன் நகரில், கடந்தாண்டு நடந்த, 'ஹவ்டி மோடி' என்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையேயான கூட்டத்தில், மோடி பங்கேற்றார். அதில், டிரம்பும் பங்கேற்றார். அப்போது, 'மீண்டும் டிரம்பின் ஆட்சி' என, மோடி கூறினார். இதை, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.அதேபோல், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை, எம்.பி.,யான பிரமிளா ஜெயபால் தலையிலான, பார்லி குழு, ' ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்' என, கடந்தாண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த சமயத்தில், அமெரிக்கா சென்றிருந்த, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரமிளா ஜெயபாலை சந்திக்க மறுத்தார்.


'ஜம்மு - காஷ்மீர் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறோம்' என, கமலா ஹாரிஸ் முன்பு கூறியிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும், ஜனநாயகக் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தன.இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி, இந்தியாவுக்கு எதிராக கொள்கை உடையது என பேசப்படுகிறது; ஆனால், அது உண்மையல்ல.


வாய்ப்பே இல்லைஒவ்வொரு நாட்டுடனான கொள்கைகள் குறித்து, புதிய நிர்வாகம் நன்கு ஆராய்ந்துதான் செயல்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவல், வர்த்தகம் என, சீனாவுக்கு எதிரான மனப்போக்கு, அமெரிக்காவில் உள்ளது. அதனால், தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியாவுக்கு ஆதராகவே புதிய நிர்வாகமும் செயல்படும்.அமெரிக்காவில் நிர்வாகம் மாறினாலும், இந்தியாவுடனான நட்புறவு கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு மோடி வாய்ப்பளிக்க மாட்டார். நட்பைத் தொடருவதற்கான முயற்சிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.இந்தாண்டு, இந்திய சுதந்திர தினத்தையொட்டி, ஜோ பிடன் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டார்.

'பருவ நிலை மாறுபாடு பிரச்னை, வர்த்தகம் உள்ளிட்டவற்றில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவேன்' என, அப்போது அவர் கூறியிருந்தார்.சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தல் பொது விவாதத்தின்போது, 'இந்தியாவில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது; குப்பையாக உள்ளது' என, டிரம்ப் கருத்து தெரிவித்தார். 'ஒரு சிறந்த நட்பு நாடு குறித்து இப்படியா குறை கூறுவது' என, ஜோ பிடன் அதற்கு எதிர் கருத்து தெரிவித்தார்.அதனால், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுப்படுமே தவிர, பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


நட்புக்கு துாது!அமெரிக்காவில் ஆட்சி நிர்வாகம் மாறினால், அதை எதிர்கொள்வதற்கு, மோடி அரசு ஏற்கனே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிடன் உடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் கடந்த சில மாதங்களாகவே அமைக்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சாந்து, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரை அவரை சந்தித்து பேசி உள்ளார். பராக் ஒபாமா அதிபராக இருந்த போது, ஜோ பிடன் துணை அதிபராக இருந்தவர். ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பதவியில் இருந்த, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அமெரிக்க வாழ் இந்தியர்களான, விவேக் மூர்த்தி, ராஜ் ஷா ஆகியோரை, சாந்து சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த இருவரும், பிடன் நிர்வாகத்திலும் முக்கிய பதவியைப் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. புதிய துணை அதிபராக பதவியேற்க உள்ள, கமலா ஹாரிஸ், ஆப்ரிக்கா - இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். அதனால், பார்லியின் கறுப்பினக் குழுவுடனும், இந்திய தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்றுள்ள, அமெரிக்க வாழ் இந்தியர்களில் மூத்தவரான அமித் பேராவுடனும், சாந்து பேசினார். இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக, அப்போது, சமூக வலை தளத்தில், சாந்து செய்தி வெளியிட்டார்.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - New jersey,யூ.எஸ்.ஏ
08-நவ-202022:56:51 IST Report Abuse
Amal Anandan நம் பிரதமர் அடுத்த நாட்டு அதிபருக்கு பிரச்சாரம் செய்வது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
08-நவ-202021:53:57 IST Report Abuse
Murthy CAA, NCR ஆகியவற்றிற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும். J&K -யும் கேள்வி கேட்கும். இனி உறவு சுமுகமாக இருக்காது.
Rate this:
Cancel
08-நவ-202016:07:03 IST Report Abuse
ஆப்பு என் கவலையெல்லாம் இனி பைடனும், கமலாவும் வரும் போது என்ன ஊரில் எந்த சுவர் கட்டி ஏழ்மையை மறைக்க பார்ப்பாங்களோ? மும்பை? திருவாரூர்? டில்லி? the wall economy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X