அமெரிக்காவின் 46வது அதிபராகிறார் ஜோ பிடன்

Updated : நவ 08, 2020 | Added : நவ 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன் : நீண்ட இழுபறிக்குப் பின், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்துஉள்ளது. அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், 77, தேர்வாகியுள்ளார்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. ஆனால், ''ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை,'' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, நான்கு நாட்களுக்கு
அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்  ஜோ பிடன்

வாஷிங்டன் : நீண்ட இழுபறிக்குப் பின், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்துஉள்ளது. அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், 77, தேர்வாகியுள்ளார்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. ஆனால், ''ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை,'' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, நான்கு நாட்களுக்கு மேலாகியும், முடிவுகள் முழுமையாக வெளியாகாமல், இழுபறி நிலவி வந்தது. மொத்தமுள்ள, 538 'எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகளில், 270 ஓட்டுகள்பெறுபவரே அதிபராக அறிவிக்கப்படுவார். நேற்று மாலை வரை, ஜோ பிடன், 264 ஓட்டுகளும், குடியரசு கட்சியின் வேட்பாளரான, அதிபர் டொனால்டு டிரம்ப், 214 ஓட்டுகளும் பெற்றுஇருந்தனர்.

இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில், ஜோ பிடன் வென்றதாக, நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், கூடுதலாக, 20 எலக்டோரல் காலேஜ் ஓட்டுகள் அவருக்கு கிடைத்தன. இதையடுத்து, அவர் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என, தெரிகிறது.இந்தியாவை பூர்வீகமாக உடைய, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார்.

அடுத்த ஆண்டு, ஜன., 20ல், அதிபரும், துணை அதிபரும் பதவியேற்பர். அமெரிக்க வரலாற்றில், மிக அதிக வயதில், அதிபர் பதவியை ஏற்பவர் என்ற சாதனையை, ஜோ பிடன் பெறுகிறார்.அதிபராக உள்ள ஒருவர், தேர்தலில் தோல்வியடைவது இது, 11வது முறை. கடந்த, 1992ல், அதிபராக இருந்த ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், அப்போதைய தேர்தலில், பில் கிளிண்டனிடம் தோல்வி அடைந்தார்.நீண்ட காலமாக, செனட் எம்.பி.,யாகவும், துணை அதிபராகவும் பணியாற்றியுள்ள ஜோ பிடன், 47 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், ஆப்ரிக்க தந்தை, சென்னை தாய்க்கு பிறந்தவர். இவர், தற்போது செனட் எம்.பி.,யாக உள்ளார். சென்னையுடனான தன் தொடர்புகள் குறித்து, பிரசாரத்தின்போது, பெருமையுடன் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 'தேர்தல் இன்னும் முடியவில்லை.'ஜோ பிடன் வென்றதாக, யாரும் சான்றிதழ் தரவில்லை. உண்மையான வெற்றியாளர் பதவியேற்பதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர உள்ளோம்' என, தெரிவித்துள்ளார். முன்னதாக, பொருளாதாரம், கொரோனா வைரஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளில், ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஈடுபட்டனர்.

டெலாவேரில், தன் பிரசார அலுவலகத்தில் இருந்து, நாட்டு மக்களுக்கு, ஜோ பிடன் உரையாற்றினார்; அப்போது, அவர் கூறியதாவது:தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்காக காத்திருக்கிறோம். அதே நேரத்தில், பணியை துவக்க, காத்திருக்க தேவையில்லை. பணிகளை துவக்கிவிட்டோம்.பதவியேற்ற முதல் நாளில், இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான எங்கள் திட்டங்களை அறிவிப்போம்.

இதுவரை, 2.40 லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அந்த உயிர்களை மீட்க முடியாது. அவர்களது மரணத்தால், அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி, பாதிப்பை உணர்கிறோம்.இனி, ஒரு உயிர் பலியாக விட மாட்டோம். பலி ஏற்படுவதை தடுப்பது தான் எங்கள் முக்கிய இலக்கு. இந்த வைரசால், இரண்டு கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள், அடுத்தவேளை உணவு கிடைக்குமா என தவிக்கின்றனர். நம் பொருளாதாரத்தை மீண்டும் வலுவாக்கு வதே எங்கள் முதல் பணி.கொரோனாவில் இருந்து, பொருளாதாரம், பருவநிலை மாறுபாடு என பல பிரச்னைகள் நம் முன் உள்ளன. வீண் சண்டை போடுவதற்கு தற்போது நேரமில்லை. நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் மிகப்பெரிய வாய்ப்பு, நமக்கு கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.


விரக்தியில் டிரம்ப்


அதிபர் தேர்தலில் ஜோபிடன் வென்றதையடுத்து டிரம்ப்பின் ஆலோசகர்கள் ,வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தன் தோல்வியை ஏற்க டிரம்ப் தயாராக இல்லை. அதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என அவர்கள் விவாதித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வரத்துவங்கிய பின் பிடனுக்கு சாதகமாக நிலைமை மாறியதும் டிரம்ப் விரக்தி அடைந்தார்.
யாரிடமும் சரியாக அவர் பேசவில்லை என கூறப்படுகிறது. அதிபராக தொடர்வதற்கு என்னெ்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஆலோசகர்களிடம் அவர் யோசனை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குகள் தொடர்வது போ்ற நடவடிக்கைகள் துவங்கின. தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு முன் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் டிரம்ப் பயன்படுத்துவார் என்றே அவருக்கு நெருக்காமானவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டெனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது, அதிபர் தேர்தலில் வெற்றி பெறுள்ளதாக ஜோபிடன் பொய் உரிமை கோருகிறார். அவ்வாறு கோருவது தவறு, நானும் அப்படி உரிமை கோர முடியும், சட்ட நடவடிக்கைகள் தற்போது தான் துவங்கியுள்ளன. இழுபறி உள்ள மாகாணங்களில் நான் தான் முதலில் முன்னிலையில் இருந்தேன். திடீரென அது மாயமாகிவிட்டது. சட்ட நடவடிக்கைகள் எடுத்தால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ela -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-202022:50:37 IST Report Abuse
Ela Too early to celebrate... Wait and See!
Rate this:
Cancel
08-நவ-202013:39:21 IST Report Abuse
ராசு New York விஜயகாந்த்தை எப்படி நம்ம ஊர் மீடீயாகள் கோமாளி என்று கூறி வீழ்த்தினார்களோ அதேபோல் அமெரிக்காவில் Trump ஐ liberal mediakal CNN, NBC, New York Times சித்தரித்தன. மேலும் அவர் தன் மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடுகிறார். Biden போல வஞ்ச புகழ்ச்சி எல்லாம் இல்லை, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. அவ்வளவே.. so மக்கள் மனதில் அமெரிக்க விஜயகாந்த் ஆக்கி mediakal தோற்கடித்து விட்டன. இது தான் இங்கு நடந்தது. All Liberal medias lobby results in Trumps loss..
Rate this:
Cancel
raju - Chennai,இந்தியா
08-நவ-202011:19:38 IST Report Abuse
raju என்னத்த சொல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X