பொது செய்தி

இந்தியா

"எல்லா கடவுள் பிறந்தநாளுக்கும் விடுமுறை விட்டால் ஆண்டு முழுவதும் விடுமுறையாக இருக்கும்..."

Updated : நவ 08, 2020 | Added : நவ 08, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
முருகனை உளமாரப் போற்றுவது நாங்கள் தான். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, குருநானக் ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, தெலுங்கு வருடப் பிறப்பு, ஓணம்னு எல்லாவற்றுக்கும் விடுமுறை விடப்படுகிறது. எங்கள் மூதாதையன் பிறந்தநாளான திருமுருகப் பெருவிழாவுக்கு அரசு விடுமுறை இல்லை.- நாம் தமிழர் சீமான்'எல்லா கடவுளுக்கும் பிறந்த நாள் விட்டால், ஆண்டு முழுவதும் விடுமுறையாகத் தான் இருக்கும்...'
"எல்லா கடவுள் பிறந்தநாளுக்கும் விடுமுறை  விட்டால் ஆண்டு முழுவதும் விடுமுறையாக இருக்கும்..."

முருகனை உளமாரப் போற்றுவது நாங்கள் தான். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, குருநானக் ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, தெலுங்கு வருடப் பிறப்பு, ஓணம்னு எல்லாவற்றுக்கும் விடுமுறை விடப்படுகிறது. எங்கள் மூதாதையன் பிறந்தநாளான திருமுருகப் பெருவிழாவுக்கு அரசு விடுமுறை இல்லை.
- நாம் தமிழர் சீமான்


'எல்லா கடவுளுக்கும் பிறந்த நாள் விட்டால், ஆண்டு முழுவதும் விடுமுறையாகத் தான் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.பட்டாசுகள் வெடிக்க, பல மாநிலங்கள் உத்தரவிட்டுள்ள தடையால், எட்டு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில், இத்தகைய திடீர் தடையால் ஏற்படும் இழப்பில் இருந்து, தொழிலாளர்களை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை.
- தி.மு.க., டி.ஆர்.பாலு


'ஆண்டுதோறும், தீபாவளி நேரத்தில் மட்டுமே இப்பிரச்னை எழுகிறதே... மற்ற நேரத்தில், கட்சிக்காரங்க மறந்திடறாங்களே...' என எண்ணத் தோன்றும் வகையில், மத்திய அமைச்சர்களுக்கு, லோக்சபா தி.மு.க., குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதம்.கேரள தேவசம்போர்டு மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டில் பகுதி நேர அர்ச்சகர் பதவிக்கு பட்டியலின, பழங்குடியினர், 19 பேருக்கு பணி நியமனக் கடிதம் விரைவில் வழங்கப்படும். கேரள வரலாற்றில் முதன்முறையாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட இருக்கிறார்.
- அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்


'வரவேற்கப்பட வேண்டியது தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிக்கை.அனைத்து மதத்துக்கும் இங்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மதக் கோட்பாட்டை கடைப்பிடிப்பதால் யாருக்கும் பிரச்னை கிடையாது. ஆனால், அது மதக் கலவரமாக மாறி விடக் கூடாது. பா.ஜ.,-வின் வேல் யாத்திரையின் நோக்கமே மதக் கலவரத்தை உருவாக்குவது தான்.
- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி


'கலவரங்களுக்கு பெயர் பெற்றது உங்கள் கட்சி தான். இப்ப ஏன் திடீர் ஞானோதயம் ஏற்படுது...' என, கேட்கத் தோன்றும் வகையில், புதுச்சேரி காங்., முதல்வர் நாராயணசாமி பேட்டி.கொரோனா காலத்தில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள், மக்களுக்கு நேரடியாக சென்று பணியாற்றி வருகின்றனர். முதல்வர் தன் உயிரை பணயம் வைத்து, மாவட்டம் தோறும் சென்று வருகிறார். ஆனால், தி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினும், 'வீடியோ கான்ப்ரன்ஸ்' மூலம் பேசுகின்றனர்.
- அமைச்சர் ராஜு


latest tamil news

'வீடியோ கான்பரன்ஸ் மூலம், அரசு திட்டங்களை செயல்படுத்துவது தான் சிறந்தது. மக்கள் குறைகளை நேரில் பார்க்கிறோம் என்ற பெயரில், கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்துகிறார் என்றல்லவா வெளியே பேச்சு உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேட்டி.வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் தான் அழுக்கு சட்டைக்காரனும், ரிக்ஷாகாரனும் வங்கிக்கு உள்ளே போக முடிந்தது. ஆனால் மத்திய அரசு, வங்கிகளை மீண்டும் தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 500 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது.
- மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் துரைபாண்டியன்


'அரசு துறை சரியாக செயல்படாத போது, லாபம் ஈட்டாத போது, தனியார் மயமாக்குவதில் எந்த தவறும் இல்லை. வேலை கிடைத்ததும், வேலையை பார்க்க வேண்டும்; சங்கம் சேர்க்கக் கூடாது...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் துரைபாண்டியன் பேட்டி.மத அடையாளங்களை அரசியலுக்கு பயன்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்தி, கட்சியை வளர்ப்பது தான், பா.ஜ.,வின் வாடிக்கையாக உள்ளது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'அதுபோல, போராட்டங்கள் நடத்தி, தொழிற்சாலை முன், சிகப்புக் கொடி ஏந்தி, குழப்பம் விளைவித்து, உற்பத்தியை நிறுத்தி, பொருளாதாரத்தை மந்தமாக்குவது தான், கம்யூ.,க்களின் வேலை என சொல்லலாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.தொடர்ந்து எங்கள் கட்சியினரை அச்சுறுத்தும் வகையில், தவறான கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை போகும் காவல் துறையினரும், சட்டப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'சட்டம் தன் கடமையை செய்யும்; அதில் தவறு என்றால், நீதிமன்றத்தை அணுகலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, மத்திய அரசின் நடவடிக்கைக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. விளை நிலங்களில், எண்ணெய் குழாய் பதிப்பைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு இருக்கிறது. இப்படி கூறினால், அங்கு உள்ளவர்கள், அ.தி.மு.க.,வுக்கு எதிராக மாறுவர் என்ற எண்ணமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.தமிழுக்காக, தி.மு.க., என்ன செய்தது... காங்., கூட்டணி ஆட்சியில் பேரம் பேசி, அமைச்சர்களையும், துறையையும் பெற்ற, தி.மு.க., தமிழை தேசிய மொழியாக அறிவிக்க முற்படாதது ஏன்?
- பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஆர்.சேகர்


'தமிழ், ஹிந்தி, திராவிடம் என்பதெல்லாம், மக்களை திசை திருப்பவும், ஓட்டுகளை சேகரிப்பதற்காகவும் தான்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை,


Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
08-நவ-202019:16:08 IST Report Abuse
skandh சீமான் அலைஸ் சைமன் , WHY DID YOU LEAVE CHRISTMAS, BAKRID, RAMJAN? WHAT THOSE FESTIVALS HAVE TO DO WITH TAMIL CULTURE? WE SHOULD BAN THESE FESTIVALS FIRST, THEN SPEAK OF HINDU FESTIVALS.
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
08-நவ-202017:12:12 IST Report Abuse
sri தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான ஸ்ரீராம நவமி, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி விடுமுறை கிடையாது. இதர மத இறைதூதர்கள், இறைசூதர்கள் பிறந்த தினங்கள் விடுமுறையாக அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பான்மை மத பண்டிகைகளுக்கு திருவிழாக்களுக்கும் பொது விடுமுறையும், சிறுபான்மை மத விழாக்களுக்கு அந்த மதத்துவர்களுக்கு மட்டும் சலுகை விடுமுறையும் கொடுத்தால் விடுமுறைகள் கணிசமாக குறைந்து உற்பத்தி சேவை பெருகும்.
Rate this:
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
08-நவ-202023:10:10 IST Report Abuse
Saravananமக்களில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் ராமரையும் கிருஷ்ணரையும் வழி படுகிறார்கள் ? (பெருமாள் பண்டிகைகள் வேறு). ராமரை வணங்கும் சமூகம் மதுரை சித்தரை திருவிழாவை கொண்டாடுவதில்லை.. அதுவே மீனாட்சியையும் பெருமாளையும் போற்றும் பண்டிகை தான்.. முருகருக்காக ஒரு பண்டிகைக்கு கூட தமிழகத்தில் அரசு விடுமுறை இல்லை. அதற்காக ஒருத்தர் பேசினால் தினமலர் ஏன் கொடுக்குது?...
Rate this:
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
08-நவ-202023:10:56 IST Report Abuse
Saravananமக்களில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் ராமரையும் கிருஷ்ணரையும் வழி படுகிறார்கள் ? (பெருமாள் பண்டிகைகள் வேறு). ராமரை வணங்கும் சமூகம் மதுரை சித்தரை திருவிழாவை கொண்டாடுவதில்லை.. அதுவே மீனாட்சியையும் பெருமாளையும் போற்றும் பண்டிகை தான்.. முருகருக்காக ஒரு பண்டிகைக்கு கூட தமிழகத்தில் அரசு விடுமுறை இல்லை. அதற்காக ஒருத்தர் பேசினால் தினமலர் ஏன் counter கொடுக்குது?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-நவ-202017:03:30 IST Report Abuse
sankaseshan Just like simon some also given comments. I is not Kerala devasvasvam board , Kerala divasam board . People wearing dirty shirts go to bank ,true but made them accounts in crores ,it is present government in entre . What's the constitution of leftists in the country ? Lockouts stayin strikes etc. No productivity . They have almost lost national identity and on the verge of loosing status of national party by ECOI .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X