பொது செய்தி

தமிழ்நாடு

கமலா ஹாரிஸ் வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்

Updated : நவ 08, 2020 | Added : நவ 08, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்
KamalaHarris, VicePresident, Native, Thulasendrapuram, Tamilnadu

திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


latest tamil news



அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்னும் சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இவரது வெற்றியை பல தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசின் வெற்றியை அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தினரும் கமலாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

துளசேந்திரபுரம் கிராம மக்கள், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றது கிராமத்திற்கு பெருமையளிப்பதாக வீட்டு வாசலில் கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கமலாவின் வெற்றியை கிராமத்தினர் கொண்டாடினர்.




வழிபாடு


அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-202007:15:42 IST Report Abuse
Darmavan உணர்ச்சிவசப்படும் அறிவிலிகள். இவரால் இந்தியாவுக்கு என்ன நன்மை என்பதை இவர்கள் முதலில் சிந்திக்கட்டும்..
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
08-நவ-202021:36:24 IST Report Abuse
Siva சென்டிமென்டல் இடியட்ஸ் என ரமணா படத்தில் வசனம் வரும். தமிழன்டா, தமிழச்சி என்றால் பொங்கு பொங்குவென பொங்குவார்கள். கமலா ஹாரிஸ் இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டவர். பாகிஸ்தான் அனுதாபி ஓட்டுக்காக இரண்டு மாதங்களாக தான், இந்திய பூர்வகுடி என்று பேசினார். இந்தியர்கள் மூன்று சதவிகிதம் ஒட்டு உள்ளது. சில மாகாணங்களில் இந்தியர்கள் ஒட்டு தான் வெற்றியை தீர்மானித்தது.
Rate this:
Cancel
08-நவ-202020:06:47 IST Report Abuse
kulandhai Kannan ஒரு திருவாரூர்காரர் அமெரிக்க துணை ஜனாதிபதி, இன்னொரு திருவாரூர்கார் ஜப்பான் துணை முதலமைச்சர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X