அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி மீண்டும் வேல் யாத்திரை: பா.ஜ., தலைவர் முருகன் கைது

Updated : நவ 08, 2020 | Added : நவ 08, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தடையை மீறி இன்று, இரண்டாவது முறையாக வேல் யாத்திரையை துவக்கிய தமிழக பா.ஜ., தலைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம்(நவ.,6) திருத்தணியில் துவங்கி, டிச., 6 திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த தமிழக பா.ஜ., திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆனால், 6ம் தேதி திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரையை துவக்க தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முயற்சி
வேல்யாத்திரை, முருகன், கைது, சென்னை,

சென்னை: தடையை மீறி இன்று, இரண்டாவது முறையாக வேல் யாத்திரையை துவக்கிய தமிழக பா.ஜ., தலைவர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம்(நவ.,6) திருத்தணியில் துவங்கி, டிச., 6 திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த தமிழக பா.ஜ., திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆனால், 6ம் தேதி திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரையை துவக்க தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முயற்சி செய்தார். இதனையடுத்து,யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசார் முருகன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை கைது செய்து மாலையில் விடுவித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என முருகன் அறிவித்தார். அதன்படி இரண்டாவது முறையாக, சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து முருகன் தலமையில் வேல் யாத்திரை துவங்கியது. யாத்திரையில், பா.ஜ.,மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து, போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தி முருகன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-நவ-202011:57:27 IST Report Abuse
Malick Raja நோட்டாவுடன் போட்டிபோட்டு கிடைத்த ஓட்டுக்கள் கூட இனி கிடைக்க கூடாது என்று திமுக போட்டுக்கொடுத்த திட்டம்தான் இந்த வேல் யாத்திரை ..அப்பூடின்னு ஒரு பேச்சு இருக்கிறதும் உண்மை
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-202004:41:57 IST Report Abuse
Nepolian S போதும் ஓவர் ஆக்டிங்கினு மோடியே சொல்ர அளவுக்கா செய்றது
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-202001:01:04 IST Report Abuse
babu அதென்னங்க தூத்துக்குடிக்கு ஒரு டீரீட்மென்ட்? இங்க வேற டீரீட்மென்டா? அது சரி ஒரே ஒரு தலைவராவது அலகு குத்தினாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X