அமெரிக்க குடியுரிமை பெறப் போகும் இந்தியர் 5,00,000 பேர்: வருங்கால அதிபர் ஜோசப் பிடன் உறுதி

Updated : நவ 09, 2020 | Added : நவ 08, 2020 | கருத்துகள் (15+ 16)
Share
Advertisement
வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபராக, ஜோசப் ராபினெட் பிடன் என்ற ஜோ பிடன் பதவியேற்றதும், ஐந்து லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்' என, அவர் சார்ந்த கட்சியின் கொள்கை விளக்க ஆவணம் தெரிவிக்கிறது. விசா நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம் செய்வது உட்பட, பல சலுகைகளை அறிவிக்கவும், ஜோ பிடன் முடிவு செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க குடியுரிமை, இந்தியர், ஜோசப் பிடன், ஜோ பிடன்

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபராக, ஜோசப் ராபினெட் பிடன் என்ற ஜோ பிடன் பதவியேற்றதும், ஐந்து லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்' என, அவர் சார்ந்த கட்சியின் கொள்கை விளக்க ஆவணம் தெரிவிக்கிறது. விசா நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம் செய்வது உட்பட, பல சலுகைகளை அறிவிக்கவும், ஜோ பிடன் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, ஜனநாயகக் கட்சியின், ஜோ பிடன், 46வது அதிபராக
தேர்வாகி உள்ளார். இந்தியாவைபூர்வீகமாக உடைய, செனட், எம்.பி.,யான கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வாகிஉள்ளார்.இவர்கள் இருவரும், வரும், ஜன., 20ல் பதவியேற்க
உள்ளனர். புதிய நிர்வாகம் பதவியேற்ற பின், என்னென்ன அறிவிப்புகள், மாற்றங்கள் வரும் என, பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்

பிடனின் பிரசார குழு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க ஆவணங்களில், பல முக்கிய
அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.அதன்படி, 'அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும், ஐந்து லட்சம் இந்தியர் உட்பட, 1.1 கோடி வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்க, பிடன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்' என, கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது: நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல், 1.1 கோடி பேருக்கு மேல் உள்ளனர். இதில் பெரும்பாலானோரின் குடும்பத்தின் வேர், அமெரிக்காவுடன் நீண்ட காலம் தொடர்புஉடையதாக உள்ளது.பிடன் அதிபரானதும், இவ்வாறு அகதிகளாக உள்ள, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர் உள்ளிட்டோருக்கு, குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகபார்லிமென்டில் சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்படும். குடும்பம் அடிப்படையிலான குடியுரிமையை வழங்குவதற்கு, பிடன் நிர்வாகம் ஆதரவு தரும். அதன் மூலம், குடியுரிமை பெறுவதற்காக நீண்ட காலம் காத்திருப்போர், குடும்பத்தை பிரிந்து இருப்போர், சேர்ந்து வாழ வகை செய்யப்படும்.தற்போது நாட்டுக்கு அகதிகளாக வருவோரை ஏற்பதற்கான வரம்பை, 1.25 லட்சமாக நிர்ணயிப்போம்.

குறைந்தபட்சம், ஆண்டுக்கு, 95 ஆயிரம் அகதிகளை ஏற்பது தொடர்பாகவும் கொள்கை முடிவு எடுக்கப்படும்.வேலைக்காக வருவோருக்கான, 'விசா' முறை மற்றும், 'கிரீன் கார்டு' எனப்படும் குடியுரிமை வழங்குவதிலும் மாற்றம் செய்யப்படும்.


நடவடிக்கை

இதில், ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு நீக்கப்படும். குடியுரிமை கேட்டு நீண்டகாலமாக காத்திருப்போர், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.
டிரம்ப் நிர்வாகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.இதுதவிர, அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் இந்தியர்களுக்கான, 'விசா' நடைமுறைக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பல சலுகைகளை அறிவிக்கவும், ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியான பின், டெலவரில் உள்ள, தன் வீட்டுக்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் இடையே, ஜோ பிடன் மிகவும்
உற்சாகமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:நான் மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் அதிபராக இருக்க மாட்டேன். ஒற்றுமையை ஏற்படுத்துவேன். என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். இதுவரை, நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருந்தேன். இனி, அமெரிக்க மக்களின் அதிபராக இருப்பேன்.இந்த நேரத்தில், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் வருத்தத்துடன் இருப்பர். நான் இதற்கு முன், 1988 மற்றும் 2008ல் அதிபர் வேட்பாளருக்கான கட்சி தேர்தலில் தோல்வியடைந்தேன். மூன்றாவது முயற்சியில்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் ஒருவருக்கு ஒருவர் வாய்ப்பு அளிப்போம். நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


பெருமையாக உள்ளது!

முதல் பெண், முதல் கறுப்பின பெண், முதல் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என, பல சாதனைகளுடன், துணை அதிபராக பதவியேற்க உள்ள, கமலா ஹாரிசுடன் இணைந்து
பணியாற்ற உள்ளது, மிகவும் பெருமையாக உள்ளது. இந்த கவுரவம் நீண்ட காலத்துக்கு முன்பே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். கடினஉழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.

ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்வு, ஜனநாயகக் கட்சி

Advertisement
வாசகர் கருத்து (15+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-நவ-202023:09:07 IST Report Abuse
kulandhai Kannan இப்படி வெளிநாட்டவர்களை வரவேற்றுத்தான், ஜனநாயகக் கட்சி ஓட்டு வங்கியை வளர்க்கிறது. நம்ம ஊர் காங், திமுக மைனாரிட்டி வாக்கு வங்கியைப் போல்
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
09-நவ-202013:47:02 IST Report Abuse
Svs yaadum oore ஜோ பிடன் பாகிஸ்தான் ஆதரவுதான் …
Rate this:
Cancel
Madras Madra - Chennai,இந்தியா
09-நவ-202011:59:34 IST Report Abuse
Madras Madra அமெரிக்காவை ஆண்டவநாளும் காப்பாற்ற முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X