தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்ப் மனைவி வலியுறுத்தல்

Updated : நவ 09, 2020 | Added : நவ 09, 2020 | கருத்துகள் (8)
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிப்பெற்றதை அடுத்து, அதிபராக உள்ள டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியை தொடரலாம் என நம்பியிருந்த டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் ஏமாற்றத்தை தந்துள்ளனர்.
Trump, Wife, Advice, Accept, Defeat, டிரம்ப், மனைவி, மெலனியா, தோல்வி, ஏற்றுக்கொள்ள, வலியுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிப்பெற்றதை அடுத்து, அதிபராக உள்ள டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியை தொடரலாம் என நம்பியிருந்த டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் ஏமாற்றத்தை தந்துள்ளனர். ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும், தனது தோல்வியை டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில் தோல்வியை ஏற்குமாறு டிரம்பிடம் அவரது மனைவி மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையில் பின்தங்கியபோது, சட்டரீதியாக ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த முயற்சித்த டிரம்ப், அதிலும் தோல்வியுற்றார். பின்னர், பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய பிடன் வெற்றி பெற்றார். டிரம்பின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பை வலியுறுத்தி வரும் சூழலில் அவரது மனைவியும் வலியுறுத்துவதால், டிரம்ப் விரைவில் தோல்வியை ஏற்பார் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
10-நவ-202007:05:21 IST Report Abuse
Indhuindian மனைவி சொல்லே மந்திரம்
Rate this:
Cancel
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
10-நவ-202001:03:15 IST Report Abuse
J. Vensuslaus Mr. Trump's display of defiance against the people's verdict shows his lack of faith in true democracy. However, he has no choice but to concede defeat and facilitate the transition process. He may introspect, reflect and lick his wound.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
09-நவ-202020:29:19 IST Report Abuse
Murthy அங்கு நீதிபதிகள் பதவிக்கு ஆசைப்படுவதில்லை அதனால் டிரம்ப்-ன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X